Wednesday, 22 July 2009

கருத்துமேடை வலைப்பதிவு தொடக்கப்பட்ட நாள் முதல் பல பாராட்டுகளும், தூற்றதல்களும் குவிந்த வண்ணம் உள்ளன. நன்றி. பல அன்பர்கள் தமிழுக்குப் பெருமையும், இழுக்கையும் ஏற்படுத்திய படைப்புகளை அனுப்பி கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கும் நன்றி.

இழிவு 1. - கே.பாலமுருகன் எனும் மலேசிய எழுத்தாளர் தமிழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கதை எழுதியிருக்கிறார். அத் தவற்றை உணர்த்திய போதிலும் அவர் அதை நியாயம் என வாதிடுகிறார்.

தமிழர்களே! அவரின் படைப்பை போற்றலாமா அல்லது தூற்றலாமா என நீங்களே தீர்மானியுங்கள். குமுகாயத்திற்கே எழுதுகிறோம் என்று அவர் கூறுகிறார் என்பதால், குமுகாய மேன்மக்களே நீங்களே முடிவு கூறுங்கள்!

அவரின் படைப்பில் சில வரிகள் -

நவீன ஆபாசங்களும் மர்ம வீடியோ கடையும்'- கே. பாலமுருகன்

\ எல்லாப் படங்களிலும் இருந்த சமமான ஒற்றுமை, ஏதாவது ஓர் இடத்தில் திறந்தபடி தெரிந்து கொண்டிருக்கும் நடிகைகளின் உடல் பாகங்கள்தான். நடிகைகளின் தொப்புள், அதில் பம்பரம் விட்டுக் கொண்டிருக்கும் சின்ன கவுண்டர் விஜயகாந்த், நடிகை கௌதமியின் இடுப்பை அளவெடுத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், இடைவெளியே இல்லாத நெருக்கத்தில் கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள் என்று அந்தப் படங்களில் எல்லா இடங்களிலும் என்னை முதிர்ச்சிப்படுத்திய ஆபாசம், மலை இடுக்குகளில் சரிந்தபடியே இருக்கும் பனியைப் போலவே இருந்தது.\\

\\ யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.\\

சான்று 1 - வல்லினம் - http://www.vallinam.com.my/jan09/column8.html
சான்று 2 - கே.பாலமுருகன் - http://www.balamurugan.blogspot.com/

18 comments:

Anonymous said...

கே.பாலமுருகன் புதிய கட்டுரைக்கு அவருடன் இருந்து பார்த்த கொஞ்சம் தமிழ் மானமுள்ள நவின எழுத்தாளனின் பார்வையில்.... என்னுடைய பதில்கள்.

அங்கே அனுப்ப கதவடைப்பு இருப்பதால், இங்கே அனுப்புகிறேன்.

பகுதி 1

//மரபை உணர எப்படி செவ்வியல் இலக்கிய வாசிப்பு மிகப் பரிந்துரைக்கப்படும் களமாக இருக்கிறதோ அதே போல நவீன இலக்கியத்தின் வடிவத்தையும் இயங்குதளத்தையும் அதன் மீள்வாசிப்பு மறுவாசிப்பு மூலமே நுகர முடியும்.//

நவீன இலக்கியத்தின் வடிவத்தையும் இயங்குதளத்தையும் சொல்லேன் தம்பி. நாங்களும் படித்து தெளிவு அடைகிறோம்.

முடிந்தால் உன் 'யோ' கம்பேனியில் சேர்ந்து அங்குலம் அங்குலமாய் வருனிக்கிறோம்.. வார்த்தைகளில் செக்ஸ் உறவு கொள்கிறோம்.

//நூரின் சிறுமியைக் கற்பழித்தவனும் சிறுமிகள் கடத்தலில் ஈடுபட்டவர்களும் எந்த நவீன இலக்கியங்களைப் படித்தவர்களாக இருக்க முடியும்//

எந்த நவின இலக்கியமும் படிக்கத முன்பே இந்த கதி என்றால், உம்மைப் போன்றோர் வடித்துக்கொட்டும் காமக்கதைகளில் சிதறியடிக்கும் விந்தணுக்களில் இனி வெடிக்கப் போகும் செக்ஸ் கொடுமைகள் எதிர்காலத்தில் எத்தைனை எத்தனையோ!!!

நினைக்கவே படுபயங்கரமாக உள்லது.


-மானமுள்ள நவின இலக்கியன்!!

Anonymous said...

பகுதி 2

//ஆகவே இங்கு நவீனத்துவம் படைப்பு ரீதியில் வெளிப்படுத்துவதே சமக்காலத்து சமூக-தனிமனித நெருக்கடிகளைத்தான்.//

அதெப்படி எல்லா நெருக்கடிகளும் யோனிக்கும் ஆண்குறிக்கும் சம்பதப்பட்டதாக இருக்கிறது??

இதுதான் 'co-insident' என்பதோ!!

//இதையெல்லாம் ஒரு திறனாய்வு சிந்தனையுடனோ அல்லது சமூக அமைப்பியல் சிந்தனையுடனோ அணுகுவதற்குப் பலருக்கும் முதிர்ச்சியில்லை,//

உனக்கு எழுதுவதற்கு முதிர்ச்சியில்லை என்று சொல்லப்பா!

- மானமுள்ள தமிழ் இலக்கியன்

Anonymous said...

//நவீன மனம் கொண்டவன் அவன் சார்ந்த சமூக சிதைவுகளை நவீன மொழியில் சொல்கிறான்.//

எது யோனி, ஆண்குறி இதிதான் நவின மொழியா? சூப்பர்!!!!

//குடும்பத்துடன் அமர்ந்து தமிழ் சினிமாவின் கொச்சைத்தனங்களைப் பார்த்துவிட்டு கைத்தட்டியும்விட்டு வருபவன் வெளியே வந்ததும் ஒழுக்கம், மானம் என்று கதறுவதில் சமூகத்தின் முன் தனது மாற்றுப் பிம்பத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் அதன் அங்கீகாரத்தைப் பெற துடிக்கும் போலித்தனங்கள் உள்ளன.//

வாங்கப்பா.. இனிமேல் குடும்பத்தோடு படம்பார்த்து நடிகையின் மார்பகம்.. தொப்புல், தொடை, இடை, குலுக்கல், கட்டிபிடித்தல், கீசடித்தல் பத்தியெல்லாம் அப்பா, அம்மா, அக்கா, தங்கை, பெத்த புள்ள எல்லாத்தையும் கூட்டிவைத்து கதைப்போம்.. கும்மாளம் அடிப்போம்.

நீர் அப்படித்தான் கூத்தடிப்பீரோ? உன் வீட்டுக்கு வந்து பார்க்கணும்.

-மானமுள்ள தமிழ் இலக்கியன்

Anonymous said...

பகுதி 4

//ஒழுக்கியவாதிகளின் கற்பிதங்கள்படி சமூகம் மிகவும் ஒழுக்கமாக எந்தத் தீண்டத்தகாத தன்மைகளாலும் பாதிப்படையால், நன்னெறி கட்டுகள் உடைப்படாமல் மிக நேர்த்தியாக இருப்பதாக ஒரு மாயையில் வாழ்ந்துகொண்டிருக்கும் கற்பனாவாத முகங்கள் முன் வைக்கப்படுகின்றன. //

நவினாவாதிகள் யோக்கியமோ? சுற்றியுள்ள சமுதாயமே கெட்டு குட்டிசுவராகி.. நாசமாகி.. எல்லாரும் செக்ஸ் வெறிபிடித்து.. பொம்பள பித்துபிடித்து அலைகிறார்கள் என்ற கற்பனாவாத முகங்கள் முன் வைக்கப்படுகின்றன.


//அதன் உக்கிர வெளிப்பாடுகளாக அவன் தன்சார்ந்த சமூகம் தன் மீது கட்டமைத்த ஒழுக்கியல்வாதங்களையும், புனித பிம்பங்களையும் உடைத்தெறிந்துவிட்டு, வன்முறையிலும் தீயச் செயல்களிலும் ஈடுபடுகிறான். தனது கோபங்களை பிறர் மீது கட்டவிழ்த்துவிடுகிறான். இங்கிருந்துதான் மனப்பிளவு ஆரம்பம் ஆகின்றது.//

இதற்கு நல்ல உதாரன புருஷன் நீயேதான்!!

Anonymous said...

பகுதி 5

//மீண்டும் மீண்டும் “யோனி, ஆண்குறி” என்ற பால் உறுப்புகளின் பெயர்களையே மேய்ந்து கொண்டிருக்கிறாகள். //

நீ மேய்ந்ததை விடவா?? இந்த வார்த்தைகளை அதிகபட்சமாக பயன்படுத்தியதற்காக உமக்கு கின்னஸ் பட்டமே கொடுக்கலாமே!!!

//“இவன் அம்மாவை. . / இவன் தங்கையை” என்கிற ஒப்பீடுகளைக் காட்டி அவர்களை அவமானப்படுத்தி அச்சுறுத்த முயல்கிறார்கள். //

ஊரான் அம்மாவை.. அக்காவை.. தங்கையை.. பொண்டாட்டியை பத்தி நீ எழுதினால் மட்டும் அது கதை.. பின்நவினத்துவம்.. ஆராய்ச்சியா..??

//பின்நவீனத்துவம் என்றால் கெட்ட வார்த்தைகளை வெளிப்படையாக பேசுவது மட்டும்தான் என்று நினைத்தால், நம் தோட்டங்களில் வாழ்ந்த பாதிக்கும் மேலான பாட்டிகளும் கிழவிகளும் முந்தைய சமூகத்தின் பின்நவீனத்துவாதிகளாகிவிடுவார்களே?//

எந்தப் பாட்டி பேசிய கெட்ட வார்த்தையாவது இலக்கியம் என்று பதிவாகி இருக்கிறதா?

-மானமுள்ள தமிழ் இலக்கியன்

Anonymous said...

பகுதி 6

//ஒரு நவீன மொழியில் பாலியல் பேசினால் அது பாவம் ஆனால் காலம் காலமாக நீங்கள் கொண்டாடும் மரபிலக்கியங்கள் பாடல் வடிவில் மரபிலக்கண கட்டுமானங்களுடன் வெளிப்பட்டால் அது புனிதமா? சரியான செவ்விலக்கிய பார்வையே இல்லையே.//

இலக்கியத்தில் காமத்தை பண்பாக சொன்னார்களே தவிர உம்மைபோல பச்சையாக சொல்ல வில்லை! அதையெல்லாம் படித்திர்ந்தால் இப்படி நுரைதள்ள உளறுவாயா நீ...!!

//நாகரிகமான முறையில் தர்க்க விவாதங்களுடன் பேச தயாரென்றால் அவர்களுன் விவாதிக்க நானும் தயார்.//

நாகரிகத்தைப் பற்றி போயும் போயும் நீர் பேசலாம? இலக்கிய கூட்டங்களில் நீ பேசாத பேச்சா? கூட்டத்தில் கலந்துகொள்ளும் சக பெண் எழுத்தாளினிகளிடம் நீ அடிக்காத கொட்டமா? மூத்த எழுத்தாலர்கள் உன்னை துப்பாத துப்பா? மறந்துவிட்டாயா?

உமது நவீனத்துவத்தின் மறுமலர்ச்சி காலம் பற்றி நிறுபிக்க முடியும். விரைவில். . ...!!!!!!

-மானமுள்ள தமிழ் இலக்கியன்

தமிழரண் said...

வணக்கம் மானமுள்ள நவின இலக்கியன் அவர்களே!

//எந்த நவின இலக்கியமும் படிக்கத முன்பே இந்த கதி என்றால், உம்மைப் போன்றோர் வடித்துக்கொட்டும் காமக்கதைகளில் சிதறியடிக்கும் விந்தணுக்களில் இனி வெடிக்கப் போகும் செக்ஸ் கொடுமைகள் எதிர்காலத்தில் எத்தைனை எத்தனையோ!!!//

தமிழ் இலக்கியங்களை வாசிக்க முனைபவர்களே மிகச் சிலர்தான். அப்படி முனைந்தவர்களும் இம்மாதிரி கட்டுரை, கதைகளைப் படித்தால் அவர்கள் நிலைமையும் என்னவாகும்?அந்த அச்சம் தற்போது எனக்கும் எழுந்துள்ளது. எல்லா மானமுள்ள புத்திலக்கியவாணர்களும் சிந்தித்தால் நன்று.

Jothivel Moorthi.AC said...

இந்த கருத்து மேடை உண்மையில் திரு.பாலமுருகன் அவர்களின் வலைப்பதிவினை அலசுவத்ற்காவா அல்லது அவர் இப்படி எழுதியிருக்கிறார் என்று பறைசாற்றி அவருடைய வலைப்பதிவிற்கு அதிக பார்வையாளார்களை வரவைப்பதற்கா?

தமிழரண் said...

//இந்த கருத்து மேடை உண்மையில் திரு.பாலமுருகன் அவர்களின் வலைப்பதிவினை அலசுவத்ற்காவா அல்லது அவர் இப்படி எழுதியிருக்கிறார் என்று பறைசாற்றி அவருடைய வலைப்பதிவிற்கு அதிக பார்வையாளார்களை வரவைப்பதற்கா?//

சோதிவேல் அவர்களுக்கு வணக்கம். கருத்துமேடை அனைவருக்கும் பொதுவானது என்று நினைவில் கொள்க. அவரின் வலைப்பதிவில் அப்படி எழுதியிருந்தார், அதனால் அதற்கு ஏற்ற விளைவுகளையும் சந்தித்துக் கொண்டியிருக்கிறார். இந்த வசைமொழிகளே அவருக்குப் பெருமை என்றால் நான் என்ன சொல்ல முடியும். கே.பாலமுருகன் போல் பலபேர் இருப்பின் அவர்களின் படைப்பையும் இங்கு அனுப்புங்கள்.

Anonymous said...

வணக்கம்.
கே.பாலகுமாரன் போன்றோருக்கு இன்னும் என்னை ஐயா சொல்லி விளங்க வைப்பது.

//பின்நவீனத்துவம் என்றால் கெட்ட வார்த்தைகளை வெளிப்படையாக பேசுவது மட்டும்தான் என்று நினைத்தால், நம் தோட்டங்களில் வாழ்ந்த பாதிக்கும் மேலான பாட்டிகளும் கிழவிகளும் முந்தைய சமூகத்தின் பின்நவீனத்துவாதிகளாகிவிடுவார்களே?//

தோட்டப்புறத்தில் நமது கிழட்டு பாட்டிகள் கொச்சை வார்த்தைகளைப் பேசியது உண்மைதான். மறுக்கவில்லை. அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். கே.பாலகுமாரன் போன்ற படித்த, (மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் இவர்கள் செய்வதை என்ன சொல்வது? பாட்டி பேசியது கொச்சையான வார்த்தை என்பது எவ்வளவு பெரிய மறைக்க, மறுக்க முடியா மெய்யோ... அதுபோலதான் இப்போது கே.பாலகுமாரன் செய்து கொண்டிருப்பது...
கிழட்டு பாட்டி பரவாயில்லை படிக்காதவள்.
ஆனால் கே.பாலகுமாரன்???

உதயன்,
மலேசியா.

Anonymous said...

ராஜ ராஜ சோழன் வந்த மாநிலமாம் கடாரம்..
நெஞ்சைத் தட்டிக் கொண்டு சென்றான் தமிழன்..
வெக்கம், அவமானம், வேதனை
தலைகுனிந்தான் தமிழன் இன்று கடாரத்தில்

இலக்கிய மரபுகளை வீசி ஏறியுங்கள்
இனிய பண்புகளைத் தூக்கெறியுங்கள்
பஞ்சாலியின் மானம் காக்க கண்ணன் வர வேண்டாம்
பலருக்கு அக்காட்சி இனிதே
காரணம் அதிநவின இலக்கியம்
கொடிகட்டி பறக்கிறது கடாரத்தில்

தமிழ்மொழிக்கு முருகன் என்றோம்
தமிழ் காமத்திற்கு இனி பாலமுருகனே
கடார கண்னிகளுக்கு தெருவில் நடக்க அச்சம்
கள்வனுக்கு அஞ்சி அல்ல
அதிநவின பெயரில்
அட்டகாசமாக தன்னை வர்ணித்து எழுதிவிடுவானோ
என்ற அச்சம்..

அணிந்தாள் சேலையை ஒரு மாது
அங்கம் அங்கமாக வர்ணித்து ரசிதானே
உணரவில்லை காம தலைவன்
ரசித்தது அவன் சகோதரியை என்று
சேலைகள் போகியாகிவிட்டன
செந்தமிழ் மொழியின் கலாச்சாரம் அழிந்துவிட்டது கடாரத்தில்

தாய் பாலூட்டுவதை ரசிப்பதும்
தங்கை சமஞ்சதை அவளிடம் கேட்பது தான
அதிநவின இலக்கியம்
ஐயா என்று மாணவன் அழைக்க நடுங்குகிறான்
ஐயா என்று அருகில் செல்ல தயங்குகிறாள் மாணவி
கை கூப்பி வணங்க மறுக்கிறது
ஒரு குடும்பம்
அது ஆசிரியர் என்ற குடும்பம்

கடாரத்தில் ஒரு பகுதியில் வெள்ளமாம்
நீரால் அல்ல
பால முருகனின் காம எழுத்தால்
வேண்டா மடா காம எழுத்து
கடாரத்தின் மானம் உன் கையெழுத்தில்

-தமிழன்-

sures kumar said...

திருந்தமாட்டார்யா... அவர் திருந்தவே மாட்டார்.
கதையை, கட்டுரை எனச் சொல்லும் அவரை விட... அவரிடத்தில் படிக்கும் மாணவர்களின் நிலையே என்னைக் கவலைக்கு ஆளாக்குகிறது.
அவர் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இது தெரியுமா?
அவருக்குப் பாடம் போதித்த விரிவுரையாளப் புண்ணியவான்களைச் சொல்லணும். வேறு என்னத்தச் சொல்ல?

Anonymous said...

சுரேஸ்குமார், 'அவருக்குப் பாடம் போதித்த விரிவுரையாளப் புண்ணியவான்களைச் சொல்லணும்' என்ற வரிகள் எழுத்தாளர் புண்ணியவானை குறிக்கிறதோ? அவர் யதார்த்தமாக ஒரு கதை எழுதியுள்ளார் பாருங்கள்..!!! அதன் தலைப்பு 'கதவுகள் தாளிடப்பட்டுள்ளன"

அதில் guru besar, bilik guru, nasi lemak போன்ற மலாய் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் அந்தப் மஹா புண்ணியவான்.அவர் ஒரு தலைமையாசிரியராக இருந்துள்ளார். அவர் தமிழ் உணர்வ பாருங்கல் எப்படி இருக்கிறது. அவரிடம் படித்த மானவர்கள் எப்படி உருப்படுவார்கள்? தமிழ் உனர்வு உள்ளவர்கலாக இருப்பார்களா?தமிழ்க்காக உழைப்பர்காளா? சொல்லுங்கள்.

இவருடம் கதை எழுத படித்தகொண்டவர்கள் பிறகு எப்படி நல்ல கதை எழுதுவார்கள். சதையத்தான் எழுதுவார்கள். இதைதான் பகாசா மலேசியவில் 'Guru kencing berdiri, Murid kencing berlari' என்று சொல்வார்கள்.

திருந்தாத ஜென்மங்களா இவர்கள்?

-மானமுள்ள நவின இலக்கியன்.

தமிழரண் said...

ஐயா சுரேஸ் குமார் அவர்களுக்கு வணக்கம். கருத்து மேடையில் தங்களின் மேலான கருத்தை இட்டுச் சென்றமைக்கு மகிழ்ச்சி.நன்றி. தொடர்ந்து வருக.

//அவருக்குப் பாடம் போதித்த விரிவுரையாளப் புண்ணியவான்களைச் சொல்லணும்//

அவருக்குப் பாடம் போதித விரிவுரையாளர்களை நமக்குத் தெரியாது. இருப்பினும் இவ்வாறு எழுதுவதற்கு ஊக்கப்படுத்தியிருந்தாலும், பாரட்டியிருந்திருந்தாலும் அவர்களை என்னவென்று சொல்ல எனக்குத் தெரியவில்லை. உரியவர்கள் தக்க நடவடிகைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் அவாவும்.நன்றி.

Anonymous said...

சுரேஸ் குமார் எந்தப் புண்ணியவானைச் சுட்டினார் என்பது தெரியவில்லை.
\\ guru besar, bilik guru, nasi lemak போன்ற மலாய் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் அந்தப் மஹா புண்ணியவான்.அவர் ஒரு தலைமையாசிரியராக இருந்துள்ளார். அவர் தமிழ் உணர்வைப் பாருங்கலள் எப்படி இருக்கிறது. அவரிடம் படித்த மானவர்கள் எப்படி உருப்படுவார்கள்? தமிழ் உனர்வு உள்ளவர்களாக இருப்பார்களா?தமிழ்க்காக உழைப்பர்காளா? சொல்லுங்கள்\\

ஆனால் இப்படி எழுதிய புண்ணியவான் ஓர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரா??? இப்படிப்பட்ட எழுத்தாளர்களும் நாட்டில் உள்ளனரா?? அட 'சை'. இவர்கள் பெற்றத் தாயிடமே தாய்பாலை அருந்திவிட்டு பின்னர் அந்தத் தாயையே எட்டி உதைப்பார்கள்!!!

கண்ணன்
பினாங்கு

தமிழரண் said...

ஐயா 'தமிழன்' அவர்களைக் கைக்கூப்பி வணங்குகிறேன். தாங்கள் எழுதிய அந்தக் கவிதையில் உள்ளிருக்கும் உணர்வுகளை யான் நன்றாக உணர்கிறேன். கே.பாலமுருகன் போன்ற ஆசிரியர்களால் பிற ஆசிரியர்களுக்கும் மாசுதான்.
மாசை நீக்குபவரே ஆசிரியர், மாசையே வாழ்வாகக் கொண்டிருக்கும் இவர்கள் ஆசிரியர் தொழிலுக்கே கேடு!!

நன்றி. தொடர்ந்து வாரும் ஐயா!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தமிழரண் said...

ஐயா மரத்தமிழன், கணேசன் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் அனுப்பிய செய்தியைத் தற்சமயத்திற்கு நிறுத்திவைத்துள்ளேன். இழிவு 1 ஒன்றை முதலில் ஒழித்த பிறகு இரண்டிற்கு வருவோம். சற்று பொறுத்திற்போம்.

நன்றி.