Tuesday, 9 March 2010

தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 4 (நிறைவு)

தாலிக்கட்டும் வழக்கம் தமிழரதே
ஒரு காதலன் தன் காதலிக்கு, அல்லது கணவன் தன் மனைவிக்கு, கழுத்தில் தாலி கட்டுவதன் வாயிலாய், அவளைத் தன் வாழ்க்கைத்துணைவி என்று பிறர்க்குக் கட்டுவது, தமிழகத்துத் தொன்றுதொட்ட வழக்கமாயிருந்து வருகின்றது.
கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்று பொருள்படுவது, தாலிகட்டும் வழக்கம் பற்றியே. ஓர் இளையானை அல்லது இளையாளை நோக்கி, ‘நீ யாரைக் கட்டப்போகிறாய்?' என்று கேட்பது உலக வழக்கு. மணமக்கள் இருவருள்ளும் தாலி கட்டுவது மணமகனும் அவனால் கட்டப்படுவது மணமகளுமாயிருப்பினும், கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்னும் பொருளில் வழங்கத் தலைப்பட்டபின், அது இருவர்க்கும் பொதுவான சொல்லாயிற்று.

“தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு”
என்னும் நாலாயிரத் தெய்வப் பனுவலடியால் (திவ்.பெரியாழ் 2,6,1) தெரியவரும்.

தாலத்தின் ஓலையினாற் செய்யப்பட்டதினாலோ, தால் போல் தொங்குவதினாலோ, பெண்டிரின் திருமணக் கழுத்தணி தாலியெனப் பெயர் பெற்றிருக்கலாம். தாலம் – பனை. தால் - நநவு. இனி, நாலி (தொங்குவது) என்பது தாலி எனத் திரிந்தது எனலுமாம்.

மக்கள் நாகரிமடைந்து பொன்னால் அணி செய்யத் தொடங்கியபின், தாலியும் பொன்னாற் செய்யப்பெற்றது.

“பொற்றாலி யோடெவையும் போம்” என்றார் ஔவயார்.
சிலர் பொற்றாலியில் மணியும் பதித்துக்கொண்டனர்.

“நாணுள்ளிட்டுச் சுடர்வீசு நன்மாணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்தணிந்து”     என்பது சிந்தாமணி (2697)

“பன்மணிப்பூணுஞ் சின்மணித் தாலியும்” என்பது பெருங்கதை (19:119)

--------------------------------------------------------------------------------------------------------------
மந்திரம் என்பது என்ன?
மந்திரம் என்பது என்ன என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார் வரையறுத்துக் கூறுகின்றார்...
"திரைமொழி மாந்தர் ஆணியிற்கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப"

தமிழ் மந்திரங்கள் என்றும் அவற்றை வல்லார் வாய்க் கேட்டுணர்க என்ற பொருளில் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.


புரோகிதம் பண்ணும் பார்ப்பனர்கள் சொல்லும் அசாகாயசூர மந்திரங்கள் சில
பண்டைத் தமிழ் மக்கள் கண்ட மந்திர இலக்கணம் இதுவாகவும் இதனுண்மை உணராது, வட மொழியில் சொல்லப்படுபவைதான் மந்திரங்கள் என எண்ணி ஏமாற்றமுறும் இக்காலத் தமிழ் மக்கள் நிலை பெரிதும் இரங்கத்தக்கது . அன்றியும்

'மனண போட்டேன்'------'-----------------------------(ஆசனம் சமர்ப்பயாமி)
'வெற்றிலைப் பாக்கு படைத்தேன்'---------------------(தாம்பூலம் சமர்ப்பயாமி)
'வாழைப்பழம் படைத்தேன்' -------------------------------(கதலீபம் நைவேத்யாமி)
'வெல்லம் படைத்தேன்' --------------------------------(குளோபகாரம் நைவேத்தியாமி)
'தேங்காய் படைத்தேன்' -------------------------------(நாரிகேளம் நைவேத்தியாமி)
'மலர் சூட்டினேன்'--------------------------------(புஷ்பம் சமர்ப்பயாமி)
'அரிசி தூவினேன்'--------------------------(அக்ஷதன்ன மஹா)
'புகை காட்டினேன்'-----------(தூபம் சமர்ப்பயாமி)
'விளக்கொளி காட்டினேன்'----------------------------(தீபம் தர்சியாமி)

முதலாவதாக செல்லப்படுவன எல்லாம் மந்திரங்களளாக எண்ணுதல் நம் தமிழ் மக்கள் பேதமே, பெரிதும் வருந்தத்தக்கது.
''தாயை நீக்கி ஒருவன் மணஞ்செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி, மணஞ்செய்து கொள்வோர்களைத் தமிழ் தெய்வமும் தமிழினச் சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும்.''


கருவி நூற்கள்

1. தமிழர் திருமணம் ஞா. தேவநேய பாவாணர்
2. சுயமரியாதை திருமணம் தத்துவமும் வரலாறும் - கி.வீரமணி
3. தமிழ்த் திருமணம் - கீ. இராமலிங்கனார்.
4. பெரியாரியல் (8)திருமணம் - பேராசிரியர் மா.நன்னன்.                        
5. வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் - செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல்
6. முருகனார் இந்து மதம் எங்கே போகிறது? - அக்னிஹோத்ரம் தாதாச்சாரியார்.

இணையத்தளங்கள் & அகப்பபங்கள்

http://tamizachiyin-periyar.com/index.php?article=677
http://madippakkam.blogspot.com

தொகுப்பாசிரியர் - தமிழரண்

No comments: