Monday 10 August 2009

நவீன மொழி + நவீன இலக்கியம் = 'பன்றிக்காய்ச்சல்' அறிகுறிகள் என்ன?

இன்று சில புத்திலக்கியவாணர்களிடம் நவீன மொழி + நவீன இலக்கியம் = 'பன்றிக்காய்ச்சல்' என்ற அதீநவீன தொற்று நோய் கண்டுள்ளது. அந் நோய் கண்டவர்கள் எவ்வாறு தென்படுவர், செயல்படுவர், பேசுவர், அவர்களின் படைப்பு எவ்வாறு இருக்கும் என்பதனை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

'பன்றிக்காச்சல்' தொற்றிய படைப்பில் நிச்சயமாக இச் சொற்களைக் காணலாம்.

1. யதார்த்தம்

2. நிதர்சனம்

3. பிரக்ஞை

4. இசம்.

5. அவதானித்தல்


2. அழகிய புனைவு என்பதற்குப் பொருள் அறியாமல் இந்த உடலுறுப்புச் சொற்களும் அதன் வினைச்சொற்களையும் அடிக்கடி காண்பீர்கள்.


1. யோனி

2. விந்து

3. ஆண் குறி

4. விரைப்பு

5. ஒழுகல்

6. துடித்தல்

7. முலை

8. அகல பரப்பி


3. "என்னதான் சொல்ல வரான்??" என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் நிச்சயமாக அது அதீநவீன பன்றிக்காச்சல் நோயல் பீடிக்கப்பட்டவரின் படைப்புத்தான் அது.


அடுத்து, இந் நோயால் பீடிக்கப்பட்டவர் எப்படி இருப்பார்கள்?


1. கேள்வி ஒன்று கேட்டால் பதில் வேறொன்றுமாகக் கூறுவர்; எழுதுவர்.


2. கதைக்கும் கட்டுரைக்கும் வேறுபாடு தெரியாமல் பிதற்றுவர்.


3. சற்றும் ஏரணம் ( லொகிக்) இல்லாமல் பேசுவர்; எழுதுவர். ( கிறுக்கன் போல்)


4. எப்படியாவது பணம், சேர்க்கவேண்டும் என்பதற்காகக் கிளர்ச்சி, அதிர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் எழுதுவர்கள்.


5. இலக்கே இல்லாமல் எழுதியதை நவீன இலக்கியம் என்பர்.


6. தங்களின் கருத்துக்களுக்கே தாங்களே முரணாக நிற்பர்.


7. திருட்டுக் கதைளை எழுதுவர்.


8. பச்சை பச்சையாகப் பேசுவர், எழுதுவர்.


9. எதற்கு எடுத்தாலும் கற்பழிப்பு, காமசேட்டை ஆகியனவற்றையே உவமைகளாகக் காட்டுவர்.


10. வெளிப்படையாக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு பல 'குள்ள நரி' வேலைகளைச் செய்வர்.


11. பிற மொழிகளைக் கலந்தும், கொச்சை வழக்கை எழுதியும், பச்சை பச்சையாக எழுதியும் இதுதான் 'நவீனமொழி' என்பர்.


12. 'கணினி; 'இணையம்' ஆகிய இரண்டு புதியசொல்லாக்கம் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.


13. தேவைப்பட்டால் காலில் விழுவர், தேவையில்லையென்றால் காலைவாரி விடுவர்

.

14. 'அறிவுக்கெட்ட பன்றிகள்' என்று யாரையாவது ஏசுவதைக் கேட்டால் உடனே அரத்த நாளங்கள் சூடு ஏறி கொதிப்படைந்து, பன்றிகளுக்கு வக்காளத்து வாங்க வருவர். ஏனெனில் பீடிக்கப்பட்டது நவின மொழி + நவின இலக்கியம் = என்ற பன்றிக்காய்ச்சல் அல்லவா.


*மேற்கூறிய 'பன்றிக்காய்ச்சல்' தொற்றிய படைப்பையோ, படைப்பாளியைக் கண்டால் உடனே தூர விலகிச் செல்லுங்கள்.


*தொற்றிக் கொண்டது என்றால் உடனே அருகில் இருக்கும் நல்ல மனநல மருத்துவரை நாடுங்கள்.


**இப் பன்றிக்காய்ச்சல் தொற்றியவரோடு தொடர்பே வைத்துக்கொள்ளாதீர்கள். இந்நோயால் உயிர்க்குத் தீங்கு இல்லை. எனினும், உயிர் இருக்கும், ஆனால் உங்கள் மூளை செத்துவிடும், செத்த மூளையாகிவிடினும் தொடர்ந்து சொத்தக் கருத்துக்கள் நிறைய வந்துகொண்டேயிருக்கும். அதுதான் இந்நோயின் வியப்பு. அதீநவீனத்துவம் வாய்ந்த அதீத நவீன 'பன்றிக்காய்ச்சல்' நோயின் 'சிறப்பு'


சிந்தனைக்கு : 'பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பர்' யாரோடு சேர்ந்து எதை எழுதப் போகிறீர்கள் என்பதை அறிவுடையவர்களே முடிவு செய்யுங்கள்.


5 comments:

Anonymous said...

konnupudde....
konnupudde....
konnupudde!
konnupudde!
konnupudde..........!

தமிழரண் said...

நான் எதையுன் கொல்லவில்லை ஐயா! பல பேர்கள் தமிழைத்தான் கொன்றுகொண்டிருக்கிறார்கள்....தாங்கள் அறியாததோ!!....

வருகைக்கு நன்றி..

subra said...

ஐயா அப்படி என்றால் நவீன இலகியம் தமிழுக்கு எந்த விதமான நன்மையும்
இல்லையா ஐயா ,சற்றே அதிகம் விளக்கவும்,நன்றி .

தமிழரண் said...

ஐயா சுப்பிரா அவர்களுக்கு வணக்கம்.

//நவீன இலகியம் தமிழுக்கு எந்த விதமான நன்மையும்
இல்லையா ஐயா//

நன்மையைவிட தீமையே அதிகம் செய்கிறது என்பது உண்மைதானே ஐயா??

ஐயா, விளக்கத்திற்கு என்னுடைய மற்ற பதிவுகளைப் பார்க்கவும் ஐயா. நன்றி.

தமிழரண் said...

ஐயா சுப்பிரா அவர்களுக்கு வணக்கம்.

//நவீன இலகியம் தமிழுக்கு எந்த விதமான நன்மையும்
இல்லையா ஐயா//

நன்மையைவிட தீமையே அதிகம் செய்கிறது என்பது உண்மைதானே ஐயா??

ஐயா, விளக்கத்திற்கு என்னுடைய மற்ற பதிவுகளைப் பார்க்கவும் ஐயா. நன்றி.