Thursday, 1 October 2009

தமிழன் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டான்!

உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்" இப்படிச் சொன்னது ஒரு தமிழ்நாட்டு தமிழறிஞரா? இல்லை! வடநாட்டு அறிஞரா? இல்லவேஇல்லை! சொன்னவர் அமெரிக்கமொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி ஆவார்!- என்று ஓரு வலைபதில் படித்தேன். யார் அந்த நோவாம் சாம்சுகி? கீழ்க்காணும் சிறு குறிப்புகளைப் படித்துத் தெளிக.

Add Image

பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ளமாசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜியில் (MIT) பல்லாண்டுகள் பணியாற்றி, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.மொழியியல் துறையில்தோற்றுவாய் இலக்கணம்(generative grammar) என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். மொழியியல் துறையில் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவராய் அறியப்படுகின்றார். உள்ளம், அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத் தொடர்பு கொள்ளும்அறிதிறன் அறிவியல் (cognitive science) என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.மொழியியல், அறிதிறன் அறிவியல், கணினியியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமின்றி, இவர் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளை மிக முனைப்புடன் திறனாய்வு செய்து பரவலாக பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார். கலை, இலக்கியம் பற்றிய தலைப்புகளில் எழுதுகின்ற உயிர் வாழும் அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக அளவு எண்ணிக்கையில் மேற்கோள்கள் காட்டப்பட்ட புகழ் மிக்க எழுத்தாளராக இருப்பவர் இவர். அண்மையில் நடத்திய ஆய்வின் படி 1980-1992 ஆம் காலப்பகுதியில், மேற்குல வரலாற்றிலேயே அதிக அளவு மேற்கோள் சுட்டப்பட்ட ஆசிரியராக அல்லது படைப்புகளில் முதல் 10 ஆக அறியப்படுபவர். - விக்கிபீடியா.
தமிழே உலக மூத்த மொழி, அது தமிழனித்திற்கு மட்டும் தாய்மொழி அன்று. உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே தாய்மொழி என்று தம் 50 ஆண்டுகால இடைவிடாது ஆராய்ச்சியால் மொழியியல் சான்றுகளோடு நிறுவிகாட்டினார் ஊழிப்பேரறிஞர் தேவநேயப் பாவாணர். இக் கருத்தைக் கேட்டறிந்த தமிழினம் என்ன செய்தது? விட்டால் உலகத்திலேயே பிறந்த முதல் குரங்கு தமிழ் குரங்குத்தான் என்பார்கள் என்று எள்ளி நகையாடியது. தமிழ் பகைவர்கள் இப்படிச் சொன்னால் அஃது இயல்பு. பன்றிகளின் இயல்பு போல. ஆனால் தமிழர்களே இப்படிச் சொன்னது, சொல்வது அறியாமையின் உச்சமும் குருதியில் ஊறிய அடிமைபோக்கும்தான் காரணம். சாப்பானிய மொழியில் 800 தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன என்று சப்பானிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதைக்கேட்ட தமிழன், "அப்படியெல்லாம் இருக்காது" என்கிறான். ஏன் இவ்வினத்திற்கு மட்டும் இந்தப்போக்கு?

இன்று, மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகிச் சொன்ன கருத்தைக் கேட்டுத் தமிழினம் மகிழ்கிறது. நோவாம் சாம்சுகியை விட ஊழிப்பேரறிஞர் தேவநேயப் பாவணார், அறிவுதிறத்தால் எள்ளளவும் குறைந்தவரில்லை. மாறாக மிகையானவர் என்பதும் உண்மை. அண்மையில் மலேசிய நாளிகையில் மரபியல் ஆய்வுகள் படி இந்தியாவின் மூத்த இனம் தென்னிந்தியர்களே (தமிழர்களே) என்ற ஆய்வு முடிவுகளைச் செய்தியாக வெளியிட்டியிருந்தது.

பாவாணரின் ஆராய்ச்சி முடிவை மேலும் வலுப்படுத்திய தற்கால செய்தி அஃது எனலாம். பாவாணரோ, மரபியல் கூறு, நிலவியல் கூறு, மாந்தவியல் கூறு ஆகிய கூறுகளையும் கடந்து தமிழே தன்னைத் தானே சுயம்பு என்பதை நிறுவிக்கொள்ளும் என்றார். மரபியல் வல்லுநர்கள் ஒரு வேளை இருட்டடிப்பு வேலை செய்தாலும், இவ்வுலகத்தில் எல்லா மொழிகளும் அழிந்து ஒரே மொழி மட்டும் வாழ்ந்தாலும் அம்மொழியே, தமிழ்தான் உலக தாய்மொழி என்பதையும், அதைப் பேசிய தமிழந்தான் உலக மூத்த குடிகள் என்பதையும் காட்டிவிடும்.

தம் வாழ்நாட்களைத் தமிழுக்கே ஈகம் செய்த பாவாணர் போன்ற நற்றமிழ் அறிஞர்களைத் தமிழர்களே இன்றும் சரியாக அறிந்துகொள்ளாததும், அறியச்செய்யாததும் தமிழ் இனத்திற்கே நாணத்தைத் தருகிறது. அவர் வாழ்ந்த நாள்களிலே அவரைப் பொன் போல போற்றிக்காத்திருக்க வேண்டும் . அதையும் செய்ய தவறியது தமிழினம்.

தமிழ் ஆய்வறிஞர்களைப் போற்றி அவர்தம் கருத்துக்களைப் பரப்பிவரும் நாளே தமிழர்களுக்கு மறுமலர்ச்சி காலம். அதுவரை இவ்வினம் இருட்டறையில் எதையாவது தட்டு தடுமாறி தடவிக்கொண்டுதான் இருக்கும்.

6 comments:

ஊடகன் said...

"தமிழன் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டான்!" என்பதையே ஒத்துகொள்ள முடியாது. தமிழனல்ல வேரவேனும் தக்க சான்றல்லாமல் ஒரு விடயத்தை ஒப்புகொள்ளமாடான்.

மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி அவர்கள் சொன்னது போல தமிழ் முதல் மூத்த மொழியெனில் சான்று ???????

தமிழரண் said...

தங்களின் வ்ருகைக்கு நன்றி.

//தமிழன் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டான்!" என்பதையே ஒத்துகொள்ள முடியாது//

இதற்கு நீங்களே முதல் சான்று. தந்தை பெரியார் வேதம், மனுதர்மம் மோசடி, மூடநம்பிக்கை ஆகிய போலிகளைச் சான்றோடு தகர்த்து எறிந்தார் என்பது உண்மைத்தானே? எல்லா தமிழர்களும் இதை ஒப்புக்கொண்டுவிட்டார்களா என்ன ஊடகன்?

//மொழியியல் ஆய்வறிஞர் நோவாம் சாம்சுகி அவர்கள் சொன்னது போல தமிழ் முதல் மூத்த மொழியெனில் சான்று ?????//

நோவாம் சாம்சுகி எனும் ஆய்வறிஞர் ஒரு கருத்தைக் கூறுகிறார் என்றால், அதுவும் உலக மூத்தமொழி என்று, சான்றுகள் இல்லாமலா ஐயா என்பதைச் சிந்தித்தல் வேண்டும்.

சான்று ஒன்று இரண்டு அல்ல,நான் இங்கே உங்களுக்கு கேள்விக்குப் பதில் என்று ஒரு விடையில் கூறும் விடயம் இஃது இல்லை என்பதை உணர்க. இருப்பினும் ஒரு சில சான்றுகள்.

1. தமிழ்தோன்றிய இடம் குமரிக்கண்டம்.
2. திராவிடமொழிகளுக்கெல்லாம் தமிழே மூலம், ஆரியத்திற்கும் முந்தியது.
3. தமிழ்ச்சொற்கள் உலகமொழிகள் எல்லாவற்றிலும் திரிந்தும், திரியாமலும் பல சொற்கள உள்ளன.
4. மரபியல் கூறுகள் கூறும் உண்மை.
5. நிலவியல் கூறும் உணமைகள்.

உங்கள் ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள,

1. தமிழ் வரலாறு 1,2 - தேவ நேயப் பாவாணர்.
2. தமிழர் வரலாறு - தேவ நேயப் பாவாணர்.
3. குமரிக் கண்டம் - கா. அப்பாதுரையார்.
4. தென்மொழி - கா.அப்பாதுரையார்.
5. சுட்டு விளக்கம் - தேவ நேயப் பாவாணர்.
ஆகிய நூல்களைப் படித்துத் தெளிக.நான் குறிப்பிட்டதும் மிகச் சில நூல்களே. அவற்றில் நீங்கள் கேட்ட சான்றுகள் பல உள்ளன.

வலசு - வேலணை said...

//
உலக மொழிகளில் மூத்த முதல் மொழி தமிழாகத்தானிருக்க வேண்டும்"
//
தமிழ்மொழி தொன்மையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சரி! தமிழ்மொழி தான் மூத்த முதல் மொழியாகவும் இருக்கலாம்.
ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அது வளர்ந்து செல்கிறதா அல்லது தேய்ந்து செல்கின்றதா? என்பதே எம்முன் உள்ள வினா.

தமிழரண் said...

வணக்கம் ஐயா.

//ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அது வளர்ந்து செல்கிறதா அல்லது தேய்ந்து செல்கின்றதா? என்பதே எம்முன் உள்ள வினா//

தமிழ் தானாக என்றும் வளராது ஐயா. தமிழன் வளர்த்தாதன் தமிழ் வளரும். அக்காலத்தில் தமிழர்கள் தமிழைப் பெரும்மளவும் வளர்த்து உலகத்திற்கே நாகரிகம் கற்றுக்கொடுத்தனர். அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கடந்து மெய்யறிவியலை இன்றளவும் உலகம் விஞ்சுவிடமுடியாத ஆன்மீக கருத்துக்களையும் தமிழில் செய்து வைத்தனர். அந்தத் தொடர்ச்சியை மேலும் வளர்க்காதது தமிழின் குற்றமா? அல்லது தமிழின் குற்றமா?
தமிழில் அறிவியல் இல்லை என்கிறோம். இது யாருடைய குற்றம்? தமிழின் குற்றமா? தமிழனுக்குப் பிற மொழி மோக பேய் பிடித்துக்கொண்டது, வெறும் ஆடல்பாடல் கொண்டாட்டாம் என இன்புறுதிகளில் வீழ்ந்துகிடக்கிறான். மற்ற மொழிக்காரன் பிற மொழிகளைப் பயில்கிறான். பின்பு அம்மொழியிலுள்ள அறிவு நூல்களை அவர்தம் தாய்மொழிக்கு மொழிபெயர்தனர். அவனும் உயர்ந்தான்; அவன் மொழியும் உயர்ந்தது. ஆனால் தமிழன், பிறமொழிச்சொற்களுக்குத் ஏற்ற தமிழ் சொற்களைக் கொடுத்தாலே ' இது எல்லாம் யார் பேசுவது; யாருக்கும் புரியும்' என்கிறான். தமிழன் வளர்கிறான, தேய்கிறானா அல்லது இன்னும் அடிமைப் போக்கிலேதான் உள்ளான என்பதை உணர்ந்தால் தமிழ் இனி விரைந்து வளரும்.

Srithar said...

கடவுள்இல்லை என தமிழ் கூறவில்லை,
இந்து,இஸ்லாம்,கிருஸ்துவம்,சமனம் பொன்ற மதஆன்மீக கருத்துக்களை தாங்கியதாலேயே தமிழுக்கு மேலும் பெறுமை சேர்ந்தது.சுயநலத்திற்காக
இந்துமதத்தை மட்டும் இழிவுரைக்கும்
செயல் தமிழை கொச்சைப்படுத்துவதாகும்

தமிழரண் said...

வணக்கம் ஐயா சிறிதர்,

//கடவுள்இல்லை என தமிழ் கூறவில்லை,
இந்து,இஸ்லாம்,கிருஸ்துவம்,சமனம் பொன்ற மதஆன்மீக கருத்துக்களை தாங்கியதாலேயே தமிழுக்கு மேலும் பெறுமை சேர்ந்தது.சுயநலத்திற்காக
இந்துமதத்தை மட்டும் இழிவுரைக்கும்
செயல் தமிழை கொச்சைப்படுத்துவதாகும்//

வேடிக்கையாக உள்ளது தங்களின் கருத்து. இக்கட்டுரைக்கும் தங்களின் கருத்திற்கும் ஒட்டவேவில்லை. இருப்பினும் தங்களின் கருத்திற்கு என் மாற்று கருத்தைக் கூறுகிறேன். ஐயா, தமிழரின் சம்யம் மேற்கண்ட சமயங்களைவிட முந்தோன்றிற்று என்பதை முதலில் அறிதல் வேண்டும். தமிழரின் சமயத்திற்கு தனிமரபுண்டு. ஆரியச் சமத்திற்குத் தமிழர் சமயம் முற்றிலும் வேறானது. இந்து எனும் மதப்பெயரால் தமிழ் நீச(நீஷ)மொழி என்று கேவலப்படுத்தப்பட்ட கதையெல்லாம் தாங்கள் அறியாதது தங்களின் அறியாமை, மடமை. இந்து மதத்தால் தமிழும் தமிழரும் கொச்சப்படுத்தபட்டனர் என்பதைச் சற்று ஆய்ந்து கற்றுக்கொள்ளுங்கள். அடுத்த வீட்டுக்காரன் பெருமையெல்லாம் பேசி பேசி எவனுடைய பெருமையும் உயர்ந்ததாக வரலாறு எங்கேயும் உண்டா?? தமிழரின் பெருமையை திட்டம்போட்டு மறைப்பதனாலேயே தமிழின் பெருமை அறியப்படவில்லை. நன்றி.