Friday 2 October 2009

பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளருமா?

''பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும்'' என்பது உண்மைக்கு மாறானது. "கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும்" என்பதைப் போன்றது. தமிழ் வளரவேண்டிய நிலையில் இல்லை. அப்படியே வளர்க்க வேண்டுமானாலும் அதற்கு இவர்கள் தேவையே இல்லை. ஏனெனில் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இன்னும் இளமை குன்றாமலிருந்து எழுத்துலகிலும், பேச்சுலகிலும், இலக்கிய உலகிலும் சிறந்து விளங்குகின்ற மொழி.

எந்த ஒரு மொழியாவது இன்று வளர்க்கவேண்டிய நிலையில் உள்ளதா? என்றால், அதற்கு சமற்கிருதம் என்றே விடை வரும். அதுதான் இன்ரு பேச முடியாமலும், உலக வழக்கு அழிந்தும் எழுத்தோடு நிற்கும் மொழி. அது மீண்டும் உயிர்பெற்றும் பேச்சு வழக்கிலும் வர வேண்டுமானால, அதை வளர்த்துதான் ஆக வேண்டும். அதற்குப் பிறமொழிச் சொற்களும், வேற்றுமை உருபுகளும், எழுத்துகளும், ஒலிகளும் கட்டாயம் தேவைப்படும். அதையும், அம்மொழியினர் வேண்டுமானால், விரும்பினால் சேர்த்துக்கொள்ள முயலலாம். அதுவும் அவர்கள் விருப்பினால்தான். அவர்களைக் கட்ட்டயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப் பகைவர்கள் சிலர், ''தனித் தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன்'' எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒருமொழி புரியவில்லை என்றால், அவன் அந்த மொழியைப் படிக்கவில்லை என்பது பொருள். தமிழ் தெரியவில்லை, புரியவில்லை என்றால் தமிழைப் படி. அதைவிட்டு நீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி நியாயமாகும். அப்படி எழுதினாலும் அது ஒரு புதுமொழியாக இருக்குமே யன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்? இக்கூற்று நல்லறிஞர்களால் நகைத்து ஒதுக்கத்தக்கதாகும்.

அட்காக் கமிட்டி, லோக்சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி எல்லாம் புரியும்போது, தமிழனுக்குத் தமிழ் புரியாது எனக்கூறுவது வெட்கக்கேடானது. ஆங்கிலச் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் நன்கு உச்சரிக்கும் தமிழனுக்குத் ''தமிழ் உச்சரிக்க வராது'' எனக் கூருவது மானக்கேடானதாகும்.

தமிழ்ச்சொல்வளம் மிகுந்த மொழி. புதிதாகச் சொல்லை உருவாக்கவும் ஏற்றமொழி. இரயில்,சைகிள் என்பன நம் நாட்டுப் பொருள்களல்ல. அதற்குத் தமிழில் தொடர்வண்டி, மிதிவண்டி, என மிக எளிதாகப் பெயரிட்டுவிட்டனர். "அண்டர் கிரவுண்டு டிரையினேஜ்" என்பதற்கு என்ன பெயரிடலாம் என எண்ணிக்கொட்டிருந்தேன். தமிழும் ஆங்கிலமும் அறியாத கொல்லிமலையிலிருந்து வந்த பட்டிக்காட்டு நண்பர் ஒருவர், நகரில் பல இடங்களில் குழிவெட்டியிருப்பதைப் பார்த்து, ''இங்கு என்ன, புதை சாக்கடை போடுகிறீர்களா?" எனக் கேட்டதும் வியந்துபோனேன். எத்தனையோ கலைச்சொற்களை உருவாக்கலாம். உருவாக்க முடியும். அதற்கு எந்த மொழியின் துணையும் தேவையில்லை. இதுகாறுங் கூறியவற்றால் தமிழ் தனித்து இயங்கிவரும் ஓர் உயர்தனிச் செம்மொழி என நன்கறியலாம்.

தமிழின் சிறப்பு - கி.ஆ.பெ.விசுவநாதம் நூலிருந்து எடுத்தாளப்பட்ட கட்டுரை.

32 comments:

புலவன் புலிகேசி said...

//அட்காக் கமிட்டி, லோக்சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி //

இவைகள் தமிழ் சொல்லா நண்பரே!!! உங்கள் கருத்து உணமைதான். ஆனால் இது போன்ற வார்த்தைகளைத் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்.........

Ananthasayanam T said...

For how many days you will keep on distinguishing and coloring Tamil so much,,,go to gudur, you cant survive with Tamil, I am also a Tamilian of 43 years but I feel more comfortable typing in English than in Tamil; language has the sole motive of communication-rest is all 'navarasam'...vishayam enral puriyuma, puriyadha, porul enru sollithan aga venduma, tamil neengal ninaithaalum maatravo azhikkavo mudiyadhu, if some words are mixed,let it be so, it may make things easier.. what is the big heck in it

Ananthasayanam T said...

pira mozhi sorkalai kalandaal thamizh paazhahadhu, kalaindhal paazhagum, oruththanukkum puriyadhu pogum, kottaivadineerai saappittu nandraha yosikkavum

தமிழரண் said...

> புலவன் புலிகேசி - தங்களின் வருகையில் மகிழ்கிறேன்.

//ஆனால் இது போன்ற வார்த்தைகளைத் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்//

இது போன்ற வார்த்தைகளைத் தமிழில்தான் எழுத வேண்டும் என வேண்டுகிறேன். தமிழாய் தமிழாய் அனைவரும் வாழ விடுவோம்.

நன்றி.

தமிழரண் said...

ஆனந்தசயனம் அவர்களுக்கு, எனக்கு ஆங்கிலத்தைவிட தமிழில் தட்டச்சுசெய்ய விரைவாக இயலும். நான் தமிழன், அதனால் தமிழர்களிடத்தில் தமிழில்தான் உரையாடுவேன்.

//f some words are mixed,let it be so, it may make things easier.. what is the big heck in it//

உங்களுக்கு அறிவும் துணிவும் இருந்தால் ஆங்கிலத்தில் தமிழைத் திணித்து எழுதிப்பாருங்கள்!! அப்பொழுது தெரியும் உங்களுக்கு!

//comfortable// இந்த ஆங்கிலச்சொல் எனக்குக் கடினமாக இருக்கிறது, அதனால் இனிமேல் ஆங்கிலம் பேசும் போதும் எழுதும் போதும் 'எளிது' என்ற சொல்லைக் கையாளளாமா? அதற்கு ஆங்கிலேயென் ஒப்புக்கொள்வானா?

//if some words are mixed let it be so,//

அந்தச் சில சொற்களின் பட்டியலை உங்களால் தரமுடியுமா??

//go to gudur, you cant survive with Tamil,//

பிரான்சு நாட்டில் போய் ஆங்கிலம் பேசி பாருங்கள். உங்களைத் தெரு நாய்கள் கூட மதிக்காது. நான் கூடூர்க்குச் சென்று வாழவேண்டுவதில்லை ஐயா. நான் தமிழன், தமிழர்களோடு வாழ்கிறேன்.

//pira mozhi sorkalai kalandaal thamizh paazhahadhu, kalaindhal paazhagum, oruththanukkum puriyadhu pogum, kottaivadineerai saappittu nandraha yosikkavum//

இப்பொழுது நீங்கள் எழுதிய செய்தி நல்ல தமிழில்தான் உள்ளது. நீங்களே புரிந்து கொண்டு எழுதிவிட்டு பிறகு தமிழ் ஒருவருக்கும் புரியாது போகும் என்கின்றீர் எப்படி? ஆங்கிலம் புரியவில்லை என்றால் அகரமுதலியை ப் புரட்டுகிறீர்கள். அது போல, தமிழ் சொல் தெரியவில்லை என்றால் போய்ப் புத்தகம் எடுத்துப் படியுங்கள். உங்கள் அடிமைபோக்கை கலைந்துவிட்டுச் சற்று பழையகஞ்சி குடித்துச் சிந்தித்துப்பாருங்கள்.

Unknown said...

நன்றாய்ச் சொன்னீர்கள் தமிழரண். அனந்தசயனன் நல்ல சயனத்தில் இருக்கிறார் போலும், 43 ஆண்டுகள் தமிழனாய் இருந்தவர் இப்போது இனம் மாறிவிட்டாரா? இப்போது இவர் யார்? ஆங்கிலோ இந்தியரோ?
ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு உலகில் நான்கு நாடுகளில் மட்டுமே பேர் போட முடியும். அவை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுசுத்திரேலியா ஆகியன. இவற்றைத் தவிர மற்ற நாடுகளில் இவை செல்லாது. இன்னும் சொல்லப் போனால் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்றாலும் வழிகேட்கக் கூட ஆங்கிலம் உதவாது.
உலகில் தமிழனைத் தவிர தாய்மொழி பற்றி இப்படி உதாசீனமாகப் பேசுபவன் வேறு ஒருவனைக் காட்ட முடியுமா? சப்பானில் வேலை செய்ய சப்பானில் திறம்பட எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டுமே ஐயா!ஆக, இனி ஆங்கிலம் உதவாது; சப்பான் தான் எல்லாம் என்று சொல்ல முடியுமா? இப்படி உலகின் பல நாடுகளை உதாரணம் காட்டலாம்.

//tamil neengal ninaithaalum maatravo azhikkavo mudiyadhu//
அனந்தசயனின் இக்கருத்து ஏற்க இயலாது. இன்றைக்குத் தனக்கு நல்ல தமிழ், புரியவில்லை என்று சொல்லும் நிலையில் தமிழன் இருக்கிறானே, இது மொழியின் சிதைவு அன்றி வேறென்ன? இப்படியே விட்டால் ஒட்டுமொத்தமாய் அழியுமே!

comfortable -அது அவரவரைப் பொறுத்தது. எனக்குத் தமிழில் தட்டச்சு செய்யவே பிடிக்கும். நான் பழகிக் கொண்டது. ஆரம்பத்தில் தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபோது கைத்தயல்தான் comfortable என்றார்களே, இப்போது என்ன ஆயிற்று? எல்லாம் பழகினால் சரியாகும்.
ஒருத்தனுக்கும் புரியாது என்பது அறியாமையின் வெளிப்பாடு. உலகில் உள்ள அத்தனை விஞ்ஞானிக்கும் ஆங்கிலம் புரியுதா என்ன? அவர்கள் வாழவில்லையா? அதிவேக ferrari வண்டி தயாரிப்பு பொறியியலாளர்- இத்தாலியர் பலருக்கு ஆங்கிலம் தெரியாதே! ஏன் இன்னும் இந்த ஆங்கில அடிமைப்புத்தி?

தமிழரண் said...

வணக்கம் சுரேசு குமார்,

//உலகில் தமிழனைத் தவிர தாய்மொழி பற்றி இப்படி உதாசீனமாகப் பேசுபவன் வேறு ஒருவனைக் காட்ட முடியுமா?//

என்னால் நிச்சயம் காட்ட முடியாது ஐயா.....

தங்களின் அறிவான கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன். ஆனந்த சயாம் போல் சாயம் பூசிக்கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்தால் சரி.

Unknown said...

language has the sole motive of communication-rest is all 'navarasam'...

ஆங்கிலத்தில்,
அப்பாவை அழைக்க, Dad come here,
அக்காவை அழைக்க, Sis come here,
நண்பனை அழைக்க, Mike, come here,
நாயை அழைக்க, Veera, come here,
யாரையும் எதையும் அழைக்க ஒரே come here...!

ஆனால், தமிழில்,

அப்பா இங்கே வாங்க...!
வீரா இங்கே வா...!

வாங்க என்றும் வா என்றும் வேறுபடுவது என்ன?
இது வெறும் communication மட்டும்தானா இல்லை வேறு ஏதும் உள்ளதா?

Unknown said...

நடக்க முடியாதவன் சித்தப்பன் வீட்டில் பெண் கேட்டானாம்... என்ற கதையா இருக்குதப்பா அனந்த சயனா! என்ன கொடுமை!

சுப.நற்குணன்,மலேசியா. said...

ஐயா ஆனந்தசயனம்,

//pira mozhi sorkalai kalandaal thamizh paazhahadhu, kalaindhal paazhagum, oruththanukkum puriyadhu pogum, kottaivadineerai saappittu nandraha yosikkavum//

என்னமா ஒரு கண்டுபிடிப்பு இது? உலக மகா கண்டுபிடிப்பையா?

குட்டூரில் பிழைக்க தமிழ் தேவையில்லை.. தமிழை உதறிவிட்டீர்களா?

சரியான சோற்றுபிண்டமையா நீர்? வயிற்றுக்கு மட்டும் வாழ்பவர் பேச்சு இப்படித்தான் இருக்கும்.

வயிரையும் தாண்டி அறிவு, மனம், மானம், பண்பாடு, மரபு என்றெல்லாம் இருக்கிறது என்பது உம்மைப் போன்றோருக்குப் புரிவது கடினம்தான்.

ஆங்கிலேயக் காலனி ஆட்சியிலிருந்து மீண்டிருக்கிறீகளே தவிர, உங்கள் அறிவும் சிந்தனையும் இன்னும் ஆங்கில அடிமை விலங்கைப் பூட்டிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு நீரே நல்ல எடுத்துக்காட்டு.

ஆங்கிலம் அறிவுமொழி, வணிகமொழி, உலகமொழி என்பதற்காகச் சொந்த மொழியை புறந்தள்ளுவது கற்றோருக்கு அறிவுடைமையாகுமா?

பிரெஞ்சு, செருமானியம், சீனா, சப்பான், கொரியா நாடுகளில் போய் உங்கள் ஆங்கிலப் புலமையைச் சொல்லிப்பாருங்கள்...!!

இளித்தவன் தமிழன்.. இளிச்சவாய்மொழி தமிழ்.. என்று உம்மைப்போல் பலருக்கும் எண்ணம்.

//vishayam enral puriyuma, puriyadha, porul enru sollithan aga venduma, //

மிகச் சரியான கருத்து. பொறுக்கித் தின்னும் தெரு நாய்க்குத் தின்னப் பிடிப்பது.. முறையாகச் சமைத்ததைத் தூய்மையான தட்டில் வைத்து சாப்பிடும் காவல் நாய்க்குப் பிடிக்கவேண்டும் என்பது கட்டாயமா என்ன?

//ஆனந்த சயாம் போல் சாயம் பூசிக்கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்தால் சரி.//

புரிய வேண்டும் என்று கட்டாயமே இல்லை. இவர்களைப் போன்றோரினால் தமிழுக்கு எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை.

பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ முதலியோர்தாம் தமிழைத் தமிழாகக் காப்பாற்றி இன்றைய தலைமுறைக்குக் கொடுத்தார்களே அன்றி..

தமிழை மணிப்பிரவாளமாகிய பண்டிதர்களோ.. தமிழில் வடமொழியைப் புகுத்திய பார்ப்பனியரோ.. தமிழில் ஆங்கிலத்தை கலந்த அடிமைகளோ அல்லர்.. அல்லர்..!

கொட்டைவடிநீர் மாறி குளம்பியும் வந்துவிட்டது. இன்னும் கொட்டைவடிநீரிலேயே ஊறிக்கொண்டிருக்கும் ஆனந்தசயனம் குட்டூருக்குப் போனதிலிருந்து தமிழ்ப் பக்கமே தலைவைக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது.

தமிழ் தமிழாக இருப்பதை விரும்பாதான், தமிழனாக இருப்பது அரிது..! கண்டிப்பாக எங்காவது தவறு நடந்தே இருக்கும்.

தமிழரண் said...

வணக்கம் ஐயா திரு.சுப நற்குணன் அவர்களே,

//தமிழ் தமிழாக இருப்பதை விரும்பாதான், தமிழனாக இருப்பது அரிது..! கண்டிப்பாக எங்காவது தவறு நடந்தே இருக்கும்.//

முற்றிலும் உண்மை ஐயா இது.. தோன்றத்தில் தமிழனாய்த் தோன்றி தமிழர்களுக்கே பகைவர்களாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தல், பின்நாளில் புரிகிறது அவர்களின் பிறப்பிலே ஐயமும் குழப்பமும் இருப்பது. அதனால்தான் குழப்பித்திற்குப் பிறந்து தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.'சா(ச)யம் வெளுத்தது...

நன்றி.

Ananthasayanam T said...

ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.. தமிழுக்கு வாழ்த்துகள்.. நான் எங்கேயாவது இங்கிலீஷ் தான் உயர்வான மொழி என்று எழுதினேனா.. தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏன் என்பது தான் நான் சொல்ல விழைந்தது, கன்னா பின்னா என்று உணர்ச்சிவசப்பட்டு ஆ ளாளுக்கு என்னை திட்டி எழுதியிருப்பதை பார்த்தால், நான் மறுப்பு தெரிவிப்பேன் என்று எதிர் பார்க்கிறீர்களா ... ஹலோ என்ற வார்த்தைக்கு எளிமையான தமிழை எத்தனை பேர் தேடுவார்கள் என்று எதிர்பார்கிறீர்கள், நான் பெரிதாக மதிக்கும் பாரதியார் சென்றிடுவீர் எட்டு திக்கும் என்று ஏன் சொன்னார்.. கூடூர் போக வேண்டி உங்களுக்கு அவசியம் இல்லா விட்டாலும், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டிலும், நீங்கள் உடுத்தும் உடையிலும் பல மொழிக்காரர்களின் உழைப்பு இருப்பதை உணர்ந்ததுண்டா..ஏன் இந்த காழ்ப்பு உணர்ச்சி பிறர் மற்றும்
பிற மொழிகளின் மேல்..? ஏன் அந்த வடமொழி சொற்கள் கண்டுபிடித்தார்கள்..
குழம்பி கொடு என்று என்றாவது நீங்கள் எத்தனை தேநீர் கடையில் கேட்டிருக்கிறீர்கள்..?
ஆங்கில அடிமை....சயனத்தில் இருக்கிறாரா.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல..?
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழக்கம் தானே.. இதில் ஏன் இவ்வளவு கொந்தளிப்பு.. உணர்ச்சிகளால் மட்டும் நாம் எதையும் சாதித்துவிட முடிவதில்லை
இன்றைய கால கட்டத்தில், கணினி வளர்ச்சிக்கே நம் ஆங்கில அறிவு உறுதுணையாக இருப்பதை உங்களால பார்க்க முடியவில்லையா.. ஏன் இந்த font கண்டு பிடிக்கவே எத்தனை முயற்சி நடந்துள்ளது என்று கற்பனை செய்து பாருங்கள், எத்தனை தமிழர் அல்லாதவர் அதற்க்கு உதவியிருப்பார்கள் என்று உம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..
நாம் தான் உயர்ந்தவன் என்ற இறுமாப்பை நீக்கிவிட்டு சற்றே யோசிக்கும் படி தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்..

தமிழரண் said...

ஆனந்த சயனன் அவர்களுக்கு;

இம்முறை தமிழிலே தட்டச்சு செய்திருப்பது. வாழ்த்துக்கள்.

//நான் எங்கேயாவது இங்கிலீஷ் தான் உயர்வான மொழி என்று எழுதினேனா.//

நாங்கள் எங்கேயாவது ஆங்கிலம் தாழ்வான மொழி அதைப் படிக்கக்கூடாது என்றோமா?

//ஹலோ என்ற வார்த்தைக்கு எளிமையான தமிழை எத்தனை பேர் தேடுவார்கள் என்று எதிர்பார்கிறீர்கள்//

ஹலோ என்ற சொல்லிருக்கு மாற்றாக நீங்கள் வேறொரு சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டுவதில்லை. வணக்கம் என்றே சொல்லியே தொடங்குகிறார்களே,நீங்கள் கண்டதில்லையா.. அறியாமை உங்கள் தவறு ஐயா...

//நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டிலும், நீங்கள் உடுத்தும் உடையிலும் பல மொழிக்காரர்களின் உழைப்பு இருப்பதை உணர்ந்ததுண்டா//

உணர்ந்துள்ளோம் ஐயா. மறுக்கப்படமுடியாத உண்மை. அதற்கும் மொழிகலப்பிற்கும் என்ன தொடர்பு ஐயா??
//ஏன் இந்த காழ்ப்பு உணர்ச்சி பிறர் மற்றும் பிற மொழிகளின் மேல்..? ஏன் அந்த வடமொழி சொற்கள் கண்டுபிடித்தார்கள்//

பிறமொழிகளைத் தமிழில் கலந்து எழுதக்கூடாது என்றால் அதற்குப் பெயர் காழ்ப்புணர்ச்சியா ஐயா?? பிறமொழி என வந்துவிட்டால் அது வடமொழியையும் உட்படுத்தியது.

//குழம்பி கொடு என்று என்றாவது நீங்கள் எத்தனை தேநீர் கடையில் கேட்டிருக்கிறீர்கள்..?//

''வாங்க நாம் தேநீர் கடைக்குச் செல்வோம்'' என்று என்றாவது பேசியது உண்டா நீங்கள். ஆனால் இங்கு தேநீர் கடை என்று மட்டும் அழகாக தமிழில் எழுதிருப்பது மட்டும் ஏன்?? உங்களைப் போன்ற குழப்பர்கள் இல்லாவிட்டால், தமிழ் உணர்வு மேலோங்கும், அச்சமயத்தில் நீங்கள் ''காப்பி'' வேண்டும் என்றால், கடைக்காரர் 'குழம்பி' என்று சொல்லுங்கள் என்பான். எங்கள் மலேசியாவில் சீனர்கள் வாழ்கிறார்கள்; வணிகம் செய்கிறார்கள். அவர்கள் 'ஆப்பில்' பழத்தை 'பிங் குவா' என்று சீன மொழியில்தான் சீன கடைக்காரரிடம் கேட்பார்கள். ஏன் அவர்களுக்கு ஆப்பில் என்று கேட்க தெரியாது? அது போல நாம் அரத்தி பழம் என்று ஆப்பிலுக்குத் தமிழில் சொன்னால் அது குற்றமா? அதற்குப் பெயர் ஆங்கிலமொழியை வெறுக்கிறோம் என்று பொருளா? என் வீட்டில் என் தாயை வாழவைக்கிறேன். நான் என் தாய்க்கு நல்ல சேய். அதற்குப் பொருள்; பிற தாய்மார்களைத் தாழ்த்துகிறேனா? வெறுக்கிறேனா? சற்று அறிவு கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.

//ஆங்கில அடிமை....சயனத்தில் இருக்கிறாரா.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல..?//

சில சமயத்தில் உண்மையைச் சொல்லும் போது, இப்படி உறுத்தல்கள் தங்களுக்குள் அதிகமாகத் தோன்றுவது இயல்புதான்.

//பழையன கழிதலும் புதியன புகுதலும் வழக்கம் தானே.//

புதிய சொற்களைப் புகவிடாமல் தடுப்பதே உம்மை போன்றவர்கள் தானே ஐயா? உங்களைவிட்டால் கணினியில் தமிழ் எதற்கு?, ஆங்கிலத்திலே இருக்கட்டும் என்பிரோ?

//கணினி வளர்ச்சிக்கே நம் ஆங்கில அறிவு உறுதுணையாக இருப்பதை உங்களால பார்க்க முடியவில்லையா.. ஏன் இந்த font கண்டு பிடிக்கவே எத்தனை முயற்சி நடந்துள்ளது என்று கற்பனை செய்து பாருங்கள், எத்தனை தமிழர் அல்லாதவர் அதற்க்கு உதவியிருப்பார்கள் என்று உம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..//

பல மொழியினர் எழுத்துரு கண்டுபிடிப்புக்கு உதவி புரிந்திருக்கிறார்கள் என்பதால், ஆங்கில மொழியையும் பிற மொழியையும் கலப்பு செய்வதில் என்ன நியாயம் கற்பிற்கிறீர்கள் நீங்கள்? மொழி ஓர் இனத்தின் தனியுடைமை. அறிவியல் உலக மக்களின் பொதுவுடைம.இவ்வேறுபாடுகள் அறியாமல் வீணே பிதற்றாதீர்கள்.

பிற மொழி அறிவு நூல்கள் எல்லாம் தமிழில் மொழிபெயர்தல் வேண்டும் என்றாரே பாரதி, அஃது உங்கள் அறிவிற்கு எட்டவில்லையோ? பாரதிக்கே முரணாக நிற்பவர் நீங்கள்தான் ஐயா. இதுதான் நீங்கள் பாரதிக்குக் காட்டும் மதிப்போ???

//நாம் தான் உயர்ந்தவன் என்ற இறுமாப்பை நீக்கிவிட்டு சற்றே யோசிக்கும் படி தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.//

நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று கூறி மற்றவர்களை தாழ்தியது செத்தமொழி சமற்கிருதம் பேசும் ஆரிய பிராமண கூட்டமே ஐயா. நாம் நம் பெருமையை அறிந்துகொள்வது, நம் நிலையை உணர்ந்து அதனின்று உயர்திக்கொள்வதற்கு.

சற்றே அடிமை புத்தியை நீக்கிவிட்டு, கூடுரிலே மட்டும் குதிரைவண்டியை ஓட்டிக்கொண்டில்லாமல், சற்று உங்கள் வண்டியை, சீன,பிரான்சு, சப்பான், செருமனியம், இருசியா, இசுரேல் ஆகிய நாடுகளுக்கும் ஓட்டிச் சென்று பாருங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் சாளரம் (windows)எத்தனை மொழிகளில் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் நோக்கம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சற்றே நல்லறிவுக்கொண்டு சிந்திக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Unknown said...

"நீங்கள் பயன்படுத்தும் சாளரம் (windows)எத்தனை மொழிகளில் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் நோக்கம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா"
அட போங்க தமிழரண், இதெல்லாம் தெரிந்திருந்தால் இப்படி பேசுவாரா?
இத்தனை மொழியில் விண்டோஸ் எதற்கு என்று கேட்டாலும் கேட்பார். உலகில் தமிழனுக்கு ஏன் தாய்மொழி? என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குட்டூரில் அவர் பேசுவது என்ன மொழி? தெலுங்கா? அதுவும் தமிழின் மற்றொரு பிரிவுதானே! இதையும் மறுப்பாரோ? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு! நான் அடிமை இல்லை...

தமிழரண் said...

//நான் அடிமை இல்லை..//

நானும் அடிமை இல்லை இனியன்... ஆனந்தசயனத்தைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை......

Anonymous said...

வணக்கம். நல்லதொரு தலைப்பில் செய்தியைப் பதித்தமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழோடு ஆங்கிலத்தையோ பிற மொழிகளையோ கலந்து பேசுவது இப்போது 'fashion'பாணியாகிவிட்டது. நுனி நாக்கில் ஆங்கிலமும் பிற மொழிகளும் தேவையின்றி தவழுவதை தமிழ் தெரிந்த தமிழன் தவிர்ப்பது சிறப்பானது என தாங்கள் கூறுவதை வரவேற்கிறேன் நண்பரே... பிறமொழிச் சொல்லுக்கு நிகராக நமது செந்தமிழில் சொற்கள் இருக்கும் போது அதை பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஆனால், சில வேளைகளில் குறிப்பிட்ட அந்த சொல்லுக்கான தமிழ்ச்சொல் தெரியாத நிலையில் ஆங்கிலத்தையும் பிறமொழிச் சொல்லையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இதை தவிர்க்க என்ன செய்வது நண்பரே?
சிந்திப்போமாக!!!


இளவேனில், ஈப்போ.

தமிழரண் said...

வணக்கம் ஐயா இளவேனில்,தங்களின் வருகையில் மகிழ்கிறேன்.

//சில வேளைகளில் குறிப்பிட்ட அந்த சொல்லுக்கான தமிழ்ச்சொல் தெரியாத நிலையில் ஆங்கிலத்தையும் பிறமொழிச் சொல்லையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இதை தவிர்க்க என்ன செய்வது நண்பரே?//

தாங்கள் கூறுவது உண்மைதான் ஐயா. இந்த இடர்பாடு எல்லாருக்கும் பொதுவாக ஏற்படுவதுதான் ஐயா. 1. இணையத் தளங்களில் பல கலைச்சொல்லாக்கங்கள் நிறையவே இருக்கின்றன ஐயா. துறை துறையாகப் பிரித்து அதற்கேற்ப சொற்களைப் பட்டியல் செய்துள்ளனர்.

2. எத்துறையில் நாம் சார்ந்து இருக்கிறோமோ, அத் துறைசார் சொற்களை நாமே மரபு கெடாமல் சொல்லாக்கம் செய்யலாம். அது நமது கடமை. யாரோ செய்து கொடுப்பார் என்று நாம் காத்திருப்பதைவிட, நாமே செய்து கொடுப்போம் என்ற எண்னம் ஒவ்வொரு துறையில் சார்ந்திருக்கின்ற தமிழர்களின் பொறுப்பாகும். தமிழுக்குச் செய்யும் தொண்டுகளில் இதுவும் ஒன்றே என் எண்ணுதல் வேண்டும்.

நன்றி.

அ. நம்பி said...

அமைதியாகச் செய்யும் கொலை! (6.10.2009)

http://valamai.blogspot.com/2009/10/blog-post_06.html

இதனையும் படிக்கலாமே!

வலசு - வேலணை said...

தமிழ் மொழி பூரண வளர்ச்சியடைந்து விட்டது என்று கூறுவது முட்டாள்தனம். எந்தவொரு மொழியுமே பூரண வளர்ச்சியடைந்து விடவில்லை. அனைத்து மொழ்களிலும் புதிய சொற்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலப்பது தவறல்ல. ஆனால் அது சரியான உச்சரிப்புள்ளதாயும் அமைய வேண்டும். இல்லையெனில் அதற்குரிய புதிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
தமிழ்மொழி தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?

தமிழரண் said...

வலசு வேலன் அவர்க்களுக்கு;

//அதேவேளையில் பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை.//

உலகத்தின் தமிழனைவிட வேறொருவன் இப்படி எக்காலத்திலும் சிந்திக்கவே மாட்டான். எந்த ஆங்கிலயேயனும் தமிழிலுள்ள சொற்களைச் சரியாகச் சொல்வதற்கு எழுத்துக்கள் இல்லையென்று கவலைபட்டது கிடையாது. எதவொரு சீனனும் ஆங்கிலச் சொற்களை சீனத்தில் எழுத தகுந்த எழுத்துக்கள் இல்லை என்று வருதம் அடைந்தது கிடையாது. சீனனுக்கு "ர,ற' உச்சரிப்பே வராது. அந்த ஒலிப்பே அவனுக்குக் கிடையாது.அதற்காக அவன் என்றவாது வருத்தம் அடைந்தது உண்டா?
ஆனால் தமிழனுக்கு மட்டும் என்ன ஒரு அடிமை குணம் பாருங்களேன். தமிழில் "f" இல்லை. அதனால் பிப்பிரவரி மாதத்தை எங்களால் சரியான ஆங்கில உச்சரிப்பரில் எழுத இயலவில்லை, அதனால் 'f' வேண்டும் என்பிறோ? பிறகு அரேபிய ஒலிக்கு எழுத்து, சீன மொழிக்கு எழுத்து என கேட்பீரோ?

ஒவ்வொரு மொழியின் உச்சரிப்பும் அவ்வினத்தின் தொன்மை வளர்ச்சியினைக் கொண்டிருப்பது. மொழியியல் படித்தவர்களுக்கு இது தெரியும். பிறமொழி இனத்தாரின் பெயரையோ, மாதப் பெயர்களை எழுதும் போது, அது தமிழ் ஒலி மரபுக்கேற்றபடியே எழுத வேண்டும். காட்டாக சனவரி, பிப்பிரவரி, ஆகத்து, உருசியா, செருமனி, சாவகத் தீவு என்ரு அமைய வேண்டும். தமிழ் அறிவு உடையவர்களுக்கு இஃது இயல்பான செய்தி.

//வேற்று மொழிச் சொல்லைத் தமிழ்மொழிக்குள் உள்வாங்குவது தவறல்ல. அப்படி உள்வாங்கினால்தான் அந்தமொழி வளரும் என்று உறுதியாக நம்புகின்றேன்.//

இதை முற்றிலுமாக தமிழறிஞர்கள் மறுத்துள்ளனர். அப்படியானல் கணினி, மகிழுந்து, பேருந்து, வாடகி, வரிசில், தூவல் என்ற சொல் எதற்கு? computer, car, bus, taxi, pencel, pen என எழுதலாம இனிமேல்???

பிறமொழிச் சொற்களைக் கலப்பதால் தனித்தன்மை கெடவுமே அன்றி, எவ்வாறு மொழி வளரும்? மேற்கூறிய உங்கள் கருத்து ஆங்கில மொழிக்கு ஒத்துவரும். அது ஆங்கில மொழியினரின் கருத்தும் கூட. மொழியறிஞர்களின் கருத்து இல்லை. ஏனெனில் அது கலவையினால் உருவாகிய மொழி. தமிழ் அவ்வாறு இல்லை. கலப்படம் செய்தவர்கள் எல்லாம் இன்று தனித்தன்மை கெடுகின்ற நிலையில் உள்ளனர். மலேசியாவில் இதை மலாய்காரர்களே இப்போது நன்கு உணர தொடங்கிவிட்டனர். வெள்ளம் அணையைக் கடப்பதற்குள் அவர்கள் செயலில் இறங்கிவிட்டனர். தமிழன்???? கண்முன்னே தமிழ் கெட்டாலும், தன் வயிறு நிரம்பினால் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பான்.

//இல்லையெனில் அதற்குரிய புதிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படல் வேண்டும்.//

இந்தக் கருத்தைத்தான் வழிமொழிய வேண்டுகிறேன்.

மனோவியம் said...

தமிழ் மொழியில் எதற்க்கு மொழிக் கலப்பு?மற்ற மொழி இல்லாமல் தமிழ் வ்ளராத? மொழிக் கலப்பு என்பது சிறுக் சிறுக நம்து நெஞ்சில் நமே நஞ்சை ஏற்றுவது போன்றது.நன்றாக நடப்பவனுக்கு எதற்க்கு ஊன்றுக்கோல்?.ஒரு ஆங்கிலனிடம் ஆங்கில்த்தில் பேசினால் சிறப்பு.அதையே ஒரு தமிழன் பேசினால் என்ன சிறப்பு ஐயா? பெரும்பாலான இந்திய் தொலைக்காட்சி தமிழ் கொலை தானே செய்கிறது.பத்து ஆங்கில வார்த்தைக்கு இரண்டு தமிழ் வார்த்தைகள்.இப்படிப் போனால் தமிழ் எப்படி வாழும்,வளரும்? இவர்களுக்கு தேவை தாயிக்கு பதில் தாசியும்,தாரத்திற்கு பதில் வேசியும் .

தமிழரண் said...

வணக்கம் திரு.மனோகரன் ஐயா; தங்களின் வருகையில் மகிழ்கிறேன்.

//மொழிக் கலப்பு என்பது சிறுக் சிறுக நம்து நெஞ்சில் நமே நஞ்சை ஏற்றுவது போன்றது.//

மிகச் சரியாகச் சொன்னீர் ஐயா.

//நன்றாக நடப்பவனுக்கு எதற்கு ஊன்றுக்கோல்?//

நெஞ்சில் ஊனமுள்ள தமிழனுக்குச் சென்று சேர வேண்டிய செய்தி இது!

//இவர்களுக்கு தேவை தாயிக்கு பதில் தாசியும்,தாரத்திற்கு பதில் வேசியும்//

மானங்கெட்ட அடிமை தமிழனுக்கு இக் கூற்று சுருக்கென்று குத்திருக்கும் என நினைக்கிறேன்......

தொடர்ந்து வருக. நன்றி.

Unknown said...

//எந்த ஆங்கிலயேயனும் தமிழிலுள்ள சொற்களைச் சரியாகச் சொல்வதற்கு எழுத்துக்கள் இல்லையென்று கவலைபட்டது கிடையாது. எதவொரு சீனனும் ஆங்கிலச் சொற்களை சீனத்தில் எழுத தகுந்த எழுத்துக்கள் இல்லை என்று வருதம் அடைந்தது கிடையாது.

சீனனுக்கு "ர,ற' உச்சரிப்பே வராது. அந்த ஒலிப்பே அவனுக்குக் கிடையாது.அதற்காக அவன் என்றவாது வருத்தம் அடைந்தது
உண்டா?//
1. தசாவதாரம் பட விழாவில் சாக்கி சான் தன் உச்சரிப்புக்கு வருந்தவில்லையே..
2. தமிழ் என்பதை TAMIல் என்று உச்சரிக்கிறோமே என்று வெள்ளையன் வருந்தினானா?

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.. வேறென்ன நான் சொல்ல?

மனோவியம் said...

நல்ல தமிழிலே பேசுவ்தும்,நற்றமிழை நாள் தோரும் வாழ்க்கை பாவனைக்கு உட்படுத்துவதும் தமிழ் வெறியாகாது. அது தமிழ் நெறியாகும்.தமிழிலே இல்லாத உயர்க் கருத்துக்கள் வேறு எந்த மொழியில் உண்டு? தமிழ் உயர்ச் செம்மொழி.அதை உண்ர்ந்தோரே உயர்ந்தோர்.

தமிழரண் said...

//தமிழிலே இல்லாத உயர்க் கருத்துக்கள் வேறு எந்த மொழியில் உண்டு? தமிழ் உயர்ச் செம்மொழி.அதை உண்ர்ந்தோரே உயர்ந்தோர்//

முற்றிலும் உண்மை ஐயா.. உலக மாந்த இனத்திற்கே தமிழ் நெறியே பொருத்தமானது என்றாலும்; சிறப்பானதும் என்றாலும் அது மிகையாகது என்பது என் தனிப்பட்டக் கருத்து. என் தாய்யை ( மொழி) நேசிக்கிறேன். அவளைப் பேணுகின்றேன்; போற்றுகின்றேன், அவள் அடி வணங்குகிறேன். இதை வெறி என்று சொன்னால் அந்தப் பேதையை என்னவென்று உரைப்பது ஐயா??

Unknown said...

//அதேவேளையில் பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை//
திருவல்லிக்கேணி triplecane ஆனபோதும் வருந்தவில்லை; எழும்பூர் Egmore ஆன்போதும் வருந்தவில்லை. ஆனால் January சனவரி ஆகிவிட்டால் கடுமையாக வருந்துவோம்.

passerby said...

குண்டூரில் தமிழ் பேச முடியும். புகைவண்டி நிலையத்தில், பேருந்து நிலையத்தில் நன்றாகத் தமிழ் பேசுவர். தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட நிறையபேர் அங்கு வசிப்பதால், தமிழ் நன்றாகப் புழங்குகிறது அங்கே.

சீனாவில் மட்டுமல்ல. இந்தியத்தலைநகரான டில்லியில் கூட ஆப்பிளை ஆப்பிள் என்று கடையில் கேட்கமாட்டார்கள். ‘சேப்’ என்று இந்தியில்தான் கேட்பர்.

ஏனோ, தமிழ்நாட்டில் தமிழை பேசமுடியவில்லை.

தமிழரண் said...

வணக்கம் ஐயா கள்ளபிரான் அவர்களே. தங்களின் வருகையில் மகிழ்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

//குண்டூரில் தமிழ் பேச முடியும். புகைவண்டி நிலையத்தில், பேருந்து நிலையத்தில் நன்றாகத் தமிழ் பேசுவர். தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட நிறையபேர் அங்கு வசிப்பதால், தமிழ் நன்றாகப் புழங்குகிறது அங்கே.//

தகவலுக்கு மிக்க நன்றி.

//சீனாவில் மட்டுமல்ல. இந்தியத்தலைநகரான டில்லியில் கூட ஆப்பிளை ஆப்பிள் என்று கடையில் கேட்கமாட்டார்கள். ‘சேப்’ என்று இந்தியில்தான் கேட்பர்.//

உலகில் தன் இனத்தையும், தன் தாய்மொழியையும் தாழ்வாக நினைப்பவன் நிச்சயமாக தமிழனாகத்தான் இருப்பான் ஐயா... சீனன் எவ்வூருக்குச் சென்றாலும் அவன் தனிந்தன்மையை மறப்பதில்லை; இழப்பதில்லை. ஆனால் தமிழன் எந்நாட்டிற்குச் சென்றாலும் அவ்வினத்தாரைப் போலவே மாறிவிடுவான்...

//ஏனோ, தமிழ்நாட்டில் தமிழைப் பேசமுடியவில்லை.//

ஏனோ தமிழன் மட்டும் தமிழனாக வாழமாட்டேன் என்று முரடு பிடிக்கிறான்...

Anonymous said...

தமிழன் மொழி இழந்தான்,நாட்டை இழந்தான், பண்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றான். இப்படி எண்ணற்ற வாழ்வியல் கூறுகளைச் சிறுகச் சிறுக இழந்து கொண்டிருக்கின்றான். அத்தனைக்கும் மொழி உணர்வும் இன உணர்வும் இல்லாது இருப்பதே முகாமையான காரணமாகும்

இன்மொழி
பாகாங்கு

மனோவியம் said...

பேச்சை தான் மொழிதல் என்கிறோம் மொழிந்துக் கொண்டிருபதை மொழிதல், மொழிந்தான் என்கிறோம், பேசிக் கொண்டிருக்கும் எந்த மொழியும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.வளர்ச்சி நிற்க்கும் போது அது செத்த மொழியாகும்.மொழியின் வளர்ச்சி என்பது ஒரு மரத்திற்கு நீரை ஊற்றி வேலிப் போட்டு பாதுக்காப்பது போன்றது.மரம் வளர்ந்து கனி தரும் .அது போன்றதே மொழி,பல் வளர்ச்சிக் கூறுகளை கிளைகாளாக பெற்றுக்கொண்டே இருக்கும்.புதுப் புது வார்த்தைகள் குறிப்புக்கள் வளர்ந்துக்கொண்டுதான் இருக்கும்.தமிழின் அதன் சொல் வளம்தான் அதன் செல்வம்.எளிய முறையிலே தமிழ் சொற்க்களை உருவாக்க முடியும். தமிழ்த் தாய் இன்னும் தமிழ் சொற்க் குழந்தையை ஈன்றெடுக்கும் போது எதற்க்கு மாற்றான் குழந்தையை வாங்கி வளர்க்க வேண்டும்? தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ் விழுதும், வித்தும் தான் தேவை.மாற்றானுடைய வித்து எதற்கு?

தமிழரண் said...

வணக்கம் ஐயா இன்மொழி அவர்களே;
தங்களின் வருகையில் அகமகிழ்கிறேன்.

//அத்தனைக்கும் மொழி உணர்வும் இன உணர்வும் இல்லாது இருப்பதே முகாமையான காரணமாகும்//

இன உணர்வு ஏற்படுமாயின் மொழியுணர்வும் தானாக வந்துவிடும். இந்தியன் எனும் போர்வையில் வாழும் தமிழன் விழித்தால் ஒழிய அவனுக்கு இனவுணர்வு வரும்.

நன்றி.

தமிழரண் said...

வணக்கம் மனோ ஐயா அவர்களே,

//தமிழ்த் தாய் இன்னும் தமிழ் சொற்க் குழந்தையை ஈன்றெடுக்கும் போது எதற்க்கு மாற்றான் குழந்தையை வாங்கி வளர்க்க வேண்டும்? தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ் விழுதும், வித்தும் தான் தேவை.மாற்றானுடைய வித்து எதற்கு?//

ஐயா இந்த வினாக்களுக்கு எனக்கும் விடை தெரியவில்லை ஐயா... ஏனெனில் இவ்வினாக்களை நானும் தமிழர்களிடம் கேட்பது உண்டு.. யாரும் விடையளித்ததில்லை.... ஒரு வேளை மாற்றன் வித்திலே பிறந்தவன்தான் மொழிகலப்புச் செய்வோனோ???