Thursday, 26 August 2010

தமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா??

தமிழன் உயர்ந்தவன். உயரிய நாகரிகம் கொண்டவன். மெய்யறிவு கண்டவன். பல நாடுகளை வென்றவன். பல அரிய செயற் புரிந்தவன். ஆனால் அவனுக்குக் கோயில் மணி அடிக்க தெரியாமல் போயிற்றாமே?? மந்திரம் ஓத தெரியாதாமே?? மந்திரம் சொல்லக் கூட தகுதியற்றவனாமே?? இவை மெய்யோ?

ஐயா மதுரை இளங்குமரனார் அவரின் உரையின் வாயிழாக எனக்குள் எழுந்த சிந்தனையின் சாறே இக்கட்டுரை. ஐயா அவர்தம் உரையில் கூறுகையில், தமிழன் கற்பாறைகளைப் பிளந்து அவற்றை இழுத்து, சுமந்து, செதுக்கி, அடுக்கி, வாயில் கட்டி, குளம் தோண்டி, கோபுரம் எழுப்பி மிக நேர்த்தியான கோவில் கட்டினான். இத்தனை வேலையையும் தமிழன் செய்தான்; செய்யத் தெரிந்திருந்தது ஆனால் கடைசியில் மணி அடிக்கும் வேலையை மட்டும் ஆசிரிய பார்ப்பன் கையில் கொடுத்துவிட்டானே! இது தமிழரின் வீழ்ச்சியில்லையா?? என மன நெகிழ வினவினார். மானமுள்ள தமிழர்களுக்குச் சுருக்கென குத்தியிருக்கும். 

இத்தனை கலைவேலைபாடுகளைத் திறம்படச் செய்த தமிழன் கடைசியில் மணி அடித்துப் பூசை செய்யத் தெரியாதவனாகிய மடமை எதுவோ, அதுவே தமிழர்களின் வீழ்ச்சி! எந்த ஆரிய பார்ப்பனன் உழைத்துப் பணம் கொடுத்துக் கோவிலைக் கட்டச் சொன்னான்? ஒருவனும் இல்லை. பணந் தமிழனுடையது. உழைப்புத் தமிழனுடையது. கட்டுந் திறம் தமிழனுடையது. ஆனால் கோவில் உள்ளே மணி அடிப்பது பூசனைச் செய்வது சமற்கிருதத்திலும் பூசாரியாக ஆரிய பார்ப்பன். அக் காலத்தில்தான் நம் தமிழ் வேந்தர்களின் அறியாமையால் இந்த தமிழினம் வீழ்ந்தது. இன்றுதான் எந்தத் தமிழப் பேரரசனுக்கோ சிற்றரசனுக்கோ ஒரு கைப்பிடி மண்ணுக்கூட சொந்தமில்லாமல் போயிற்றே, பின் ஏன் இன்னும் தமிழன் ஆரியனுக்கும் சமற்கிருதத்திற்கும் அடிமைப்பட்டே வாழ்கிறான்? 

Tuesday, 9 March 2010

தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 4 (நிறைவு)

தாலிக்கட்டும் வழக்கம் தமிழரதே
ஒரு காதலன் தன் காதலிக்கு, அல்லது கணவன் தன் மனைவிக்கு, கழுத்தில் தாலி கட்டுவதன் வாயிலாய், அவளைத் தன் வாழ்க்கைத்துணைவி என்று பிறர்க்குக் கட்டுவது, தமிழகத்துத் தொன்றுதொட்ட வழக்கமாயிருந்து வருகின்றது.
கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்று பொருள்படுவது, தாலிகட்டும் வழக்கம் பற்றியே. ஓர் இளையானை அல்லது இளையாளை நோக்கி, ‘நீ யாரைக் கட்டப்போகிறாய்?' என்று கேட்பது உலக வழக்கு. மணமக்கள் இருவருள்ளும் தாலி கட்டுவது மணமகனும் அவனால் கட்டப்படுவது மணமகளுமாயிருப்பினும், கட்டுதல் என்னும் சொல் மணத்தல் என்னும் பொருளில் வழங்கத் தலைப்பட்டபின், அது இருவர்க்கும் பொதுவான சொல்லாயிற்று.

“தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு”
என்னும் நாலாயிரத் தெய்வப் பனுவலடியால் (திவ்.பெரியாழ் 2,6,1) தெரியவரும்.

தாலத்தின் ஓலையினாற் செய்யப்பட்டதினாலோ, தால் போல் தொங்குவதினாலோ, பெண்டிரின் திருமணக் கழுத்தணி தாலியெனப் பெயர் பெற்றிருக்கலாம். தாலம் – பனை. தால் - நநவு. இனி, நாலி (தொங்குவது) என்பது தாலி எனத் திரிந்தது எனலுமாம்.

மக்கள் நாகரிமடைந்து பொன்னால் அணி செய்யத் தொடங்கியபின், தாலியும் பொன்னாற் செய்யப்பெற்றது.

“பொற்றாலி யோடெவையும் போம்” என்றார் ஔவயார்.
சிலர் பொற்றாலியில் மணியும் பதித்துக்கொண்டனர்.

“நாணுள்ளிட்டுச் சுடர்வீசு நன்மாணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்தணிந்து”     என்பது சிந்தாமணி (2697)

“பன்மணிப்பூணுஞ் சின்மணித் தாலியும்” என்பது பெருங்கதை (19:119)

--------------------------------------------------------------------------------------------------------------
மந்திரம் என்பது என்ன?
மந்திரம் என்பது என்ன என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார் வரையறுத்துக் கூறுகின்றார்...
"திரைமொழி மாந்தர் ஆணியிற்கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப"

தமிழ் மந்திரங்கள் என்றும் அவற்றை வல்லார் வாய்க் கேட்டுணர்க என்ற பொருளில் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.

Thursday, 4 March 2010

தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 3

1.4 விஸ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபானி பீமிசதுஆரிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது
இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தம்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமல்லவா?

2. சமற்கிருத திருமணச் சடங்குகளில் இறைவனுக்கு இடமே இல்லை
சமஸ்கிருத திருமணச் சடங்குகளில் இறைவனுக்கு இடமே இல்லை; பதிலாக தேவர்கள் தான் முன்னாக்கம் செய்யப் பெறுகிறார்கள். எனவே சமஸ்கிருத திருமணம் நாத்திகமானது.


3. பண்பழிப்புச் சடங்குகள்
சமஸ்கிருதத் திருமணச் சடங்குகளில் காசியாத்திரை, நாமகரணம், ஜாதகர்மம், அன்னப்பிராசனம், சூடா-கர்மா மற்றும் மதுவர்க்கம் போன்ற பொருளற்ற, அறிவுக்கிசையாத, அறநெறிக்கு மாறான, ஆபாசமான, ஆட்சேபணைக்குரிய சடங்குகள் உள்ளன.


சமஸ்கிருதத் திருமணங்களில் தாலிகட்டும் சடங்கே கிடையாது என்று ரிக் வேதத்திலிருந்து திருமணச் சடங்குகளைத் தொகுத்து வழங்கும் ஏகாக்கினி காண்டம் என்ற நூல் கூறுகிறது. இந்நூல்களின் உரையாளர்கள் தாலிகட்டுதல் என்பது ஆரிய இனத்தின் வழக்கமல்ல என்றும், இது திராவிட இனத்தின் வழக்கம் என்றும், பிற்காலத்தில் இச்சடங்கு ஆரிய இனத்திலும் நுழைந்து விட்டது என்றும் தெளிவுபட எடுத்துரைக்கிறார்கள். அதனால் மாங்கல்யம் தந்துநானேனா என்று தற்காலத்தில் ஒலிக்கப்படும் சொற்கட்டு பிற்காலத்தில் பெயர் தெரியாத எவரோ இயற்றியது என்றும் உறுதிப்படுத்துகிறார்கள்.


Wednesday, 24 February 2010

தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 2

மானமுள்ள தமிழர்கள் வைதீக திருமணத்தை ஒதுக்கவேண்டிய காரணங்கள்.

தமிழர்களுக்காக பார்ப்பனர்கள் பயன்படுத்தும் திருமண மந்திரங்கள்; அதில் மறைந்திருக்கும் கேவலமான உட்பொருட்கள்.

1. இழிவை ஏற்படுத்தும் மந்திரங்கள்

1.1 'சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ'

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.

அதாவது மந்திரத்தில் உள்ள "பதி" என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது. "முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்" என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று "அறிவியல்" விளக்கம் வேறு தருவார்கள்.சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள்.ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு "பதி" என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதே வேதங்களிலும் புராணங்களிலும் "பொம்பிளைப் பொறுக்கிகளாக" சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் "பாதுகாப்பில்" தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

ஓர் ஒப்பீடு!

திருமணமாகின்ற மணப் பெண்ணைô பல கடவுள்களுக்கு மனைவியாக்கிடும் ரிக்வேத காலத்து மந்திர சுலோகம் (``சோம ப்ரதமோ... என்று கூறப்படுகிற சமஸ்கிருத சுலோகத்தைப்) போலவே, ரோமானிகள் கி.பி. 300-400 என்ற கால கட்டத்தில், ரோமானியக் கடவுள்களுக்கு மணப் பெண்ணை மனைவியாக்கித் தான் பிறகு திருமணம் செய்து வைக்கும், நடைமுறை சடங்கு செய்து வந்துள்ளனர்.
இந்த விவரங்கள் Sex lives of the popes என்ற ஆங்கில நூல், Nigel Cawthorne என்பவரால், பல வரலாற்று º¡ýÚ¸¨Çì கொண்டு எழுதப்பட்டு Prion வெளியீட்டகத்தால் லண்டனில் 1990 வெளியிடப்பட்ட நூலில் உள்ளது. அதில் உள்ள ஆங்கிலப் பகுதியும் அதன் தமிழாக்கமும் கீழே தரப்படுகிறது. 

Augustine was particularly struck by Roman marriage ceremonies. These began in the temple of Priapus where the bride had to sit on the god’s enormous, ugly phallus - though Augustine pointed out that this only robbed the bride of her modesty not her virginity or her fertility. He was also struck by a number of other gods that were involved in the business of marriage, all of whom accompanied the newly weds home for the wedding night. There who the god of marriage, the god was brought the bride to the marriage home and another god to keep here there. Once the wedding guests had gone, there were a horde of other gods and goddesses who trooped into the marriage chamber for the deflowering. Augustine marvelled at how a man could be aroused and a virginal, young woman throw off here sexual inhibitions with so many people around” (Page 28).
 
இதன் தமிழாக்கம்:

அகஸ்டின் ரோமானிய மணச் சடங்கு முறைகளால் குறிப்பிடத்தக்க வகையில் மனத்தாக்கத்திற்கு இலக்கானார். பிரியாப்பிஸ் தெய்வத் தின் கோவிலிலே இவை தொடங்கினஅங்கே மணமகளானவள் கடவுளுடைய வீங்கிப் பெருத்த ஆண் குறியின்மீது அமர வைக்கப்பட்டாள். அகஸ்டின் அந்த வழக்கம் மணமகளின் அடக்க ஒழுக்கத் தினைக் கொள்ளையிடுவதைத் தவிர அவளுடைய கன்னித் தன்மையையோ கருவுறுவளத்தையோ பாதிப்பதில்லை எனச்சுட்டிக் காட்டினார்.
இன்னும் அவர் மணவிழாச் சடங்குகளை நடத்துவதில் ஈடுபட்ட பலப்பல கடவுளர்களால் தாக்குண்டார். எல்லாத் தெய்வங்களும் புது மணத் தம்பதியரின் இல்லத்திற்கு மண இரவுச் சடங்குகளை நிறைவேற்றி வைப்பதற்காக உடன் சென்றனர். அங்கு மணவினையை நடத்தி வைத்த தெய்வம் இருந்தது. மணமகனை வீட்டிற்கு அழைத்து வந்த தெய்வம் இருந்தது. இன்னொரு தெய்வம் அங்கே அவளைக் காக்கவெனக் காத்திருந்தது.


மணவிழா விருந்தினர்கள் விடைபெற்றுக் கொண்ட நொடியே, கணக்கற்ற கடவுளர் - கடவுளச்சிகளடங்கிய கும்பல் மந்தையென உட்புகுந்தது. எதற்காக? மணமகளைக் கன்னி கழிப்புக்கு உட்படுத்துவதற்காக, அகஸ்டினுக்கோ ஓர் ஆடவனின் புலனுணர்ச்சிகள் எவ்வாறு தூண்டப்படுகின்றன என்பதும், எப்படி புணர்ச்சிச் செயலில் முன் அறிவு இல்லாத ஓர் இளம் பெண் தன்னைச் சுற்றிலும் அத்தனை பேர் இருக்கும் நிலையில் தன் பாலியல் கூச்சத்தையும் கட்டுப் பாட்டினையும் துறந்துவிட முடியும் என்பதுவும் மாபெரும் விந்தையாக இருந்தது!

1.2 உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வாஅந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜஉதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடேஅந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி


விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக!உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பின் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?


இவற்றை விட மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி, இவற்றிற்கு எல்லாம் கணவனின் சம்மதம் பெற்று... இப்படி இந்த மந்திரங்கள் நீண்டு செல்கின்றன.

1.3 தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ரஷரே 
பஷேபம்

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

தொடரும் பாகம் - 3

Thursday, 18 February 2010

தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 1

முன்னுரை

மக்கள் ஆறறிவுடையார். அதனால் எதைச் செய்யினும் அறிவோடு செய்தற்குரியர். ஒருவர் வாழ்க்கையில் தலைச்சிறந்த நிகழ்ச்சியாயும், இருவர் இன்ப வாழ்விற்கு அடிகோலுவதாயும், பலர் மகிழ்ச்சியுதற்குரிய காட்சியாயும், நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கூடுவதாயும், உள்ள திருமணச்சடங்கைப் புரோகிதனுக்கன்றி பொருளொடு ஓதுகின்றானா பொருளில்லாது உளறுகின்றான என்பதையும் அறியவியலாத நிலையில், இவ்விருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், குருட்டுத்தனமாக நடத்திருவருவது, நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் முற்றும் முரணானதாம். ஆகவே திருமணத்தைப் பற்றி சிறிதாவது தெரிந்துகொள்வதும் தெரியவிரும்புவதும் அறிவுடடையோரின் செயலாகும்.

திருமணம்
ஓர் ஆடவனும் ஒரு பெண்டும், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்த இசைந்து ஒன்று சேர்வதே மணமாம். மணத்தல் கலத்தல் அல்லது கூடுதல். மணவாழ்க்கைக்கென்றே இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத்திருப்பதாலும், அதனிடத்து மிகுந்த அறப்பொறுப்புள்ளமையாலும், அது ஆயிரங்காலத்துப் பயிர் ஆகையாலும், வாழ்க்கைத் துணைவர் இருவரும் தெய்வத்தின்முன் அல்லது தெய்வத்தின்பேரில் பலரறிய ஆணையிட்டுக் கூடுவதாலும், மணம் தெய்வத்தன்மை பெற்றுத் திருமணம் எனப் பெற்றது. இப் பெயர் பின்னர், திருமணத் தொடர்பான விழாவையுங் குறித்தது.
திருமணத்திற்குரிய ஒப்பந்த அல்லது தாலிகட்டுச் சடங்கு கரணம் எனப்படும். கரணம் செய்கை, அது ஆட்சி பற்றிச் சடங்கை உணர்த்திற்று. கரணத்தோடு கூடிய திருமணத்தை வதுவை என்பது இலக்கிய வழக்கு.
முதற்காலத்தில், எல்ல ஆடவரும் பெண்டிரும், பருவம் வந்தபின் விலங்கும் பறவையும்போலக் கரணமின்றியே கூடி வாழ்ந்து வந்தனர். ஆயின், சில ஆடவர், தாம் மணந்த மகளிரை மணக்கவில்லையென்று பொய்யுரைத்தும், அவரைக் கைவிட்டும், அவர் வாழ்வைக் கெடுத்து வந்ததினால், மக்கள் மீது அருள்கொண்ட தமிழ முனிவர், கரணம் என்னும் திருமணச் சடங்கை ஏற்படுத்தினர். மணமகன், மணமகளைத் தன் நிலையான வாழ்க்கைத் துணையாகக் கொள்வதாக, பலரறியக் கடவுள் திருமுன் சூள் (ஆணை) இடுவதே கரணமாம்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
பொருள் : குமுதாயத்தில் பொய் கூறலும், பிழைபட நடத்தலும் தோன்றிய பின்னர், தலைவர் ஏற்படுத்தினர் வதுவை (திருமணம்) என்று கூறுவர்.
என்பது தொல்காப்பியம் (கற்பியல்,4)
-----------------------------------------------------------------------------------------------------------------
ஆரியப் பார்ப்பனர் வருகை
காட்டுமிராண்டிகளாக வந்து கயவர்களாகவும் மாறிய பார்ப்பனர் இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) தாம் முன்னரே அறிவு முதிர்ச்சியும், நாகரிகச் சிறப்பும் பெற்று வாழ்ந்த தமிழர்களைத் தம் அடிமைகளாக்கி ஏய்த்து வாழக்கடவுள், மதம். போன்ற கருவிகளைப் பயன்படுத்தினர். அவற்றுள் ஒன்றுதான் இத்திருமண முறையில் அவர்கள் புகுத்திய மாற்றங்கள்.
பிராமணர் தென்னாடு புகத்தொடங்கியது ஏறத்தாழக் கி.மு2000 எனும், அவர் முதலடியிலேயே பெருந் தொகையினராய் இங்கு வந்தவரல்லர். முதன்முதல் இங்குக் கால் வைத்த பிராமணர் விரல்விட்டு எண்ணத்தக்கவரே யாவர். கிறித்துவ ஊழி தொடங்கும்வரை இடையிட்டிடையிட்டுச் சிறு சிறு கூட்டத்தாராகவே அவர் வந்து கொண்டிருந்தனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பின், பல்லவ அரசர் காலத்தில்தான், அவர் பெருவாரியாக வடநாட்டிலிருந்து குடியேற்றப் பட்டனர். இதைப்பிற்காலச் சேரசோழ பாண்டியரும் பின்பற்றினர்.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடஎன்று சிலப்பதிகாரம் பிராமண அல்லது ஆரியப் பார்ப்பனப் புரோகிதத்தைக் குறித்திருப்பது, கடைச்சங்கக்காலத்தில் நகரங்களிலும் மாநகரங்களிலும் பெரும்பாலும் அரசரிடையும் வணிகரிடையும் இருந்த நிலைமையைத்தான் குறிக்கும். இன்றும் பிராமணரில்லாத பல நாட்டுப்புறத்தூர்கள் இருப்பதாலும், சில தமிழக்குலத்தார் பிராமணப் புரோகிதமின்றித் தம் மணங்களை நடத்திக்கொள்வதாலும், பிராமணர் வந்தப்பின்பும், கடைச்சங்கக் காலம்வரை பெரும்பால் தமிழர் மணங்கள் தமிழ்மரபிலேயே நடத்துவந்தன என்று அறிதல் வேண்டும்.
இடைக்கால மாறுதல்கள்
பிராமணர் பெருந்தொகையினராய்த் தமிழகம் வந்து சேர்ந்த பின், தமிழர் திருமணங்களிற் பல மாறுதல்கள் ஏற்பட்டன.
1. பிராமணப் புரோகிதமும் வடமொழிக் கரணமும்
பிராமணர் தேவர்வழி வந்த நிலத்தேவர் (பூசுரர்) என்றும்; அவர் முன்னோர் மொழியாகிய வேதமொழியும் அதனொடு வேதகால இந்திய வட்டார மொழிகளாகிய பிராகிருதங் கலந்த இலக்கிய மொழியாகிய சம்ற்கிருதமும், தேவமொழியென்றும்; இரு பெருந்தவறான கருத்துக்கள் கடைச்சங்கக் காலத்திலேயே அரசர் உள்ளத்தில் ஆழ வேரூன்றிவிட்டதனால், பிற்கலத்தில் பிராமணப்புரோகிதம் தமிழகத்தில் விரைந்து பரவுவதற்கு மிகுந்த வசதியாயிருந்தது.