Wednesday 29 July 2009

பாட்டனுக்குத் தப்பி பிறந்த கே.பாலமுருகன்!!

‘சங்க இலக்கியப் பாட்டுகளில் காணப்படும் பழைய மரபுகள் பல உண்டு. காதற்பற்றிய கற்பனையை அகம் என்றும், வீரம் கொடை புகழ் முதலிய வாழ்க்கைத்துறைகளைப் புறம் என்றும் பகுத்த பாகுபாடு அந்த மரபுகளுள் முதன்மையானது ஆகும். அகப்பாட்டுகளில் கற்பனைத் தலைவன் தலைவியின் காதல் பாடுபாடும்.’ – தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன்.


‘மக்களில் நாட்டுப் பாடல்களில் இருந்த இன்னொரு மரபும் அந்தப் புலவர்களின் காதல் பாட்டுகளில் படிந்துவிட்டது. ஊர்களில் மக்கள் பாடித் திரியும் பாடல்களில் காதல் பற்றிப் பாடும்போது இன்னாருடைய காதல் என்றும் குடும்பம் என்றும் பெயர் முதலியவற்றைச் சுட்டி பாடுவது முடியாதது.’ ’ – தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன்.


ஏன் பெயரைச் சுட்டக்கூடாது என்றனர்? இன்னாருடையவரின் காதல், குடும்பம் என்று சொல்லிவிட்டால், அடுத்து நம் மனத்தில் இயல்பாக அவர்களின் தோன்றம்தான் கண்ணுத்தெரியும். பின் நம் கற்பனை அவர்கள் மேல்தான் பாயும் என்பதே அன்றி சொல்லவந்த செய்தி அல்ல என்பது தெளிவு.

அகத்திணை இயல் – (அகம் - உள்ளம்; தலைவன் தலைவியரின் உள்ளங்கள் இணைந்த ஒழுக்கத்தை கூறும் பகுதி; வீட்டு வாழ்க்கையைக் கூறுவது)

தொல்காப்பியம். பா 1000 –

மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்.

பொருள் – இயற்பெயர் சுட்டக்கூடாது.


அகநானூறு இயற்றிய 145 புலவர்களுமே பாட்டன் தொல்காப்பியர் சுட்டிய மரபை விட்டு விலாகாமல் பாடியிருக்கின்றனறே!. தொல்காப்பியர் சொன்ன மரபைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்த பல புலவர்களும் திருவள்ளுவர் உட்பட அனைவரும் பின்பற்றியிருக்கின்றனரே! வியப்பில் ஆழ்த்துகிறது. புலவர்களே அவ்வாறு இருப்பின் தமிழர் மரபைக்கேலிசெய்வதும் தமிழ் மரபிற்கு தேசிய விளக்கம் கேட்பதும், மரபு மரபு என்பவர்களை இகழும் கே.பாலமுருகன் போன்றோர் இவர்களுக்குப் பாட்டனா? நிச்சயமாக இல்லை.


நான் இவ்வாறு நீண்ட மேற்கொள்களைக் காட்டி விளக்குவதற்குக் காரணம், முதலில் அகத்திணை என்பதைச் சற்று

அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சரி தலைவன்(கணவன் அல்ல) என்று கூறிய கே.பாலமுருகன் ஏன் இறுதிவரையில் தலைவன், தலைவி என்பவர்கள் யார் என்று சொல்லவில்லை? புல்லறிவுக்கு எட்டவில்லையா அல்லது தன் நெஞ்சமே அதற்கு முரண்படுகிறதா?


இன்றும் வழக்கில் குடும்பத்தலைவர்; குடும்பத்தலைவி என்று சொல்ல கேட்கிறோம். அதற்குப் பொருள் குடும்பத்தின் குலமகனும், குலமகளும் என்பதே! அவ்வாறு அகநானூற்றில் குறித்த

தலைவன் தலைவி, காதலர்களாவும் இருப்பார்கள் - கணவன் மனைவியாகவும் இருப்பார்கள் என்பது தெளிவு. சரி, அகநானுற்றில் பாடப்பட்ட தலைவன்; தலைவியின் இயல்புக

ளும், பண்புகளும் எப்படி இருந்தன? கே.பாலமுருகன் சுட்டிய அதே சங்க இலக்கிய அகநானுற்றிலே விடை இருக்கிறது. மறைக்க இயலாது.


5. பாலை – நூல் பக்கம் 14, 15, 16

அளி நிலை பெறாஅது மரிய முகத்தள் விளி நிலை கொள்ளாள், தமியள், மென் மெல, நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஆ

குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற

----------------------------------------------- எனத்தொடரும் - பாலை பாடிய பெருங்கடுங்கோ.

கூற்று விளக்கம் : தலைவியைப் பிரிந்து சென்று பொருளீட்டி வரக்கருதிய தலைவன் நாம் பிரிவோமாயின் நம் தலைவி உயிர் வாழாள் என்று உணர்ந்து அவள் தன்மையைத் தன் நெஞ்சிற்கு

எடுத்துக் கூறிச் செலவு தவிர்த்தது. தங்களுக்குப் இப்பொழுது தலைவி என்பவள் எப்படியிருந்தாள் என்பதும். அவள்பால் தூயஅன்பு கொண்டு ஒழுகும் தலைவன் எப்படியிருந்தான் என்பதும். இன்று காதல் எனும் பெயரில் உடலிச்சையைத் தீர்ப்பதற்கே காதலிப்பவர்க்கு இப் பண்பு இராது என்று யாம் தெளிய வைக்க வேண்டா.

அடுத்து பாலை –

இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன கருங் கால் ஓமைக் காண்பு,

இன் பெருஞ் சினைக் கடியுடை

நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,

-------------------- எனத்தொடரும் - எயினந்தை மகனார் இளங்கீரனார்.


கூற்று விளக்கம் : தலைவன் தலைவியை மணந்து இல்லறம் நடத்தினான். அப்போது தன் நெஞ்சம் வற்புறுத்தப் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியை விட்டுப்பிரிந்தான். நிற்க. இப் பாடலில் சுட்டபட்டவர்கள் கணவனும் மனைவியும் ஆவர். கே.பாலமுருகனுக்கு இப்பொழுது தலைவன், தலைவி யார் என்பது ஓரளவிற்காவது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (செத்த மூளைபோல் இல்லாமல் இருந்திருந்தால்)


அடுத்து தலைவன் திருமணத்தை வெறுத்து இருக்கிறான் என்பது கே.பாலமுருகண் புல்லறிவில் எழுந்த கருத்தே ஆகும்! தலைவன் திருமணத்திற்கு நாட்டம் கொள்ளாதபவனாக இருக்கிறான் என்று கூறியிருந்தனரே தவிர இவர் சொல்வது போல் வெறும் காம இச்சையை விரும்பி (அப் பாடல் அப்படிச் சுட்டவும் இல்லை - பின்பு பார்ப்போம்) களவின்பத்தை மட்டும் செய்தான் என்று பொருள் அல்ல.


சான்று –

குறிஞ்சி கோழிலை வாழைக் கோள்

முதிர் பெருங்குலை ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த

சாரற் பலவின் களையோடு, ஊள் படு

----------------- எனத் தொடரும் - கபிலர்.


கூற்று விளக்கம் : தலைவன் களவின்பமே பெரிதும் விரும்பித் தலைவியை மணந்து கொள்ளும் கருத்தின்றி நாளும் பகற்குறிக்கண் வந்து ஒழுகலானான். அது கண்ட தோழி அவனுக்குத் தலைவி இற்செறிக்கட்டமையை உணர்த்தி அவளை விரைந்து மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது.


//திருமணம் என்கிற முறைகளை வெறுத்து தலைவியோடு களவொழுக்கத்தில் இலயிக்க மட்டும் கசிந்து உணர்கிறான்// //பொருளீட்ட பல தேசங்கள் நாடோடியைப் போல திரிகிறான், பரத்தையர்களோடு தங்கி களவவொழுக்கம் கொள்கிறான்.//


களவின்பம் என்பது என்ன? களவு, கள்வன், கள்ளப்பதிப்பு உள்ள கள் என்பது கருமை பொருளையே சுட்டும். இன்னும் நீளும். இவ்வாறு கருமை பொருளிருந்து தோன்றிய களவு என்னும் சொல் யாருக்கும் தெரியாமல் (கருமையில் எப் பொருளையும் காணமுடியாது) தலைவனும் தலைவியும் சந்திந்து உறவாடும் இன்பமே! இன்றும் உண்மையான காதலர்கள் பிறர் அறியாமல் சந்திப்பது உண்டுதானே! இக் களவின்பத்தை அறியாது, களவின்பம் என்பதை உடற்சேர்கை எனும் போக்கிலே கூறும் கே.பாலமுருகன் எங்கே? அவர்கள் இவர்களுக்குப் பாட்டனா? நிச்சயமாக இல்லை!


பொருள் தேடும் இடத்தில் விலைமகனை நாடுகிறான் சில தலைவன். ஆம் முற்றிலும் உண்மை. அப்படி நாடிய தலைவன் பின்பு எவ்வாறு மனம் நொந்தான் என்பதையும், அவ்வாறு இழுக்கை செய்த தலைவனை தலைவி என்ன செய்தாள்? அகநானுற்றை முழுதும் படிக கே. பாலமுருகனே! இவ்வற்றிலிருந்து நாம் அறிய வேண்டுபவன, உண்மை அன்பும், அறமும், அருளும் கொண்ட எந்த தலைவனும் விலைமாதரைத் தீண்டவும் மாட்டன்; தீண்டவுமாகாது!


//பொருளீட்ட பல தேசங்கள் நாடோடியைப் போல திரிகிறான், பரத்தையர்களோடு தங்கி களவவொழுக்கம் கொள்கிறான்.//


அக் காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் எல்லாம் ஒழுக்கச் சீலர்கள் என்று யாரு ஐயா உம்மிடம் (பாலமுருகன்) சொன்னது?


பொருட்பெண்டிர் பொய்ம்பை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணம்தழீஇ யற்று – குறள் 913


விலைமதார்களை நாடும் ஆண்களை எப்போவோ வள்ளுவ ஆசான் கடிந்துரைத்துவிட்டார்.

------------------------------------------------------------------------------------------------


நெய்தல்

நகைநனி உடைத்தால் – தோழி! – தகைமிக,
கோதை ஆயமொடு குவவுமணல் ஏறி,
வீததை கானல் வண்டல் அயர,

கதழ்பரித் திண்தேர் கடைஇ வந்து,

------------------------------------ தொடரும் - கருவூர்க் கண்ணம்பாளனார்

கூற்று விளக்கம்: தலைவியைத் தன்னொடு கூட்டுவிக்கும்படித் தலைவன் தோழியை வேண்டினான்; அது கேட்ட தோழி தலைவியை அணுகி அவளைத் தலைவனுக்கு உடன்படுமாறு கூறியது.

//நவீன மொழியில் இந்தச் சங்கப் பாடலின் கூற்று விளக்கத்தை மொழிப்பெயர்த்தால்: தலைவியோட உடம்புக்கு ஆசைப்பட்ட தலைவன் (கணவன் அல்ல) அவளை அவனொடு படுக்கும்படி தோழியைத் தூது அனுப்புகிறான். தோழியும் அவனுக்காக தூது போய் அவனுடன் ஒத்துழைக்கும்படி கேட்கிறாள்.//

தலைவன் தோழியை ஏவி தலைவனோடு படுக்க அழைத்தான் என்று கே.பாலமுருகன் சொல்லிருப்பது; அவரின் அறியாமையைக் காட்டுகின்றதா அல்லது அவரின் உள்ளக்கிடக்கா என்பது யான் அறியேன். இன்று கூட எந்தப் தோழியாவது இப்படிப்போய் சொல்வாளா? அல்லது எந்த ஆண்மகனாவது தோழியை இவ்வாறு தூது விடுவனா? எண்ணிப்பாருங்கள். இருப்பின், அது நவின மொழி பேசும் இழியோர்களே ஆவர்.


அவர்(பாலமுருகன்) எடுத்த அகநானூறு பதிப்புரையிலே கூடல் என்பதற்குப் பொருள் கூறியிருப்பது அவர் அறியவில்லை போலும். ‘சங்கம் என்பது தமிழாயும் அவை; கூடல் எனவும் பொருளுடையது. பள்ளிக்கூடம் என்று நாம் சொல்வதிலும் கூடல் இருக்கிறதே! அதற்குப் பொருள் எல்லாரும் சேர்ந்து உடற்சேர்க்கை செய்தனரா? சரி இடம் கண்டு பொருள் காண்போம் ஆயினும், தலைவன் தலைவியை தன்னோடு சந்திக்கவே தலைவியை ஏவினான் என்பது பொருள்.


முடிவு :


அறம், பொருள், இன்பம், வீடு என்றாங்கு அமைவதாம் தமிழறம் நான்கே. இன்பத்தை மூன்றாம் இடத்தில் வைத்திருப்பதும் எண்ணத்தகும். இன்பம் தமிழர்களின் அக உறுதிப்பொருளே ஆகும். ‘மழலையின் பேச்சில், இசையின் இனிமையில், காற்றின் வருடலில், மழையில் நனைதலில், கூழின் ருசியில், இயற்கையில், நட்பில், காதலில், உழைப்பில் என வாழ்வின் பல தடங்களில் இன்பத்தை மனிதர் உணரலாம். சிறப்பாக "இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்." மூலம். விக்கிபெடியா.


ஆக, ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பத்தை எல்லா மக்களும் உய்துணர வேண்டும் என்றே அகநானூறு, கலித்தொகை, திருக்குறள், போன்ற இன்னும் பல நூல்களில் கூறியிருப்பது நம் வாழ்விழும் அந்த அறம்வழி பெறும் களவின்பத்தைப் பெற வேண்டுமே என்பதே! இன்றும் தொடக்கப் பள்ளிகளில் திருக்குறளைக் கற்பிக்கும் பொருட்டு அறம், பொருள் ஆகிய இருபால்களை மட்டும் கற்பிப்பது ஏன்? இன்பதுப்பால் என்ன மரபு பாலியலா? சற்றும் அறிவின்மை கே. பாலமுருகனே! இன்பத்துப் பாலை, உய்து உணர நமக்கு ஏற்ற மனபக்குவம், உடலமைப்பு, அகவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே கற்றுத்தர முடியும். ஆக, மேற்கண்ட பண்புகளைக் கருத்தில் கொண்டு , கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் அகநானூறைக் கற்றுக் கொடுக்கின்றனர். யாரும் அதை தடுக்க அவசியமும் இல்லை. கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்வியல் இன்பம் அது.

இனி, களவின்பத்தைக் கற்பிக்கும் பேராசிரியர்கள் சற்றுக் கவனமாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் காமுகனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபு தெரியாது; கற்றுக்கொடுக்கும் பேராசிரியர்க்கும் காமுகனை அடையாளங்காண முடியாது.


// பாலியல் சொல்லான இளைய முலையை சங்கப் பாடலில் பயன்படுத்தியதற்காக கருவூர்க் கண்ணம்பாளனாரரைத் தண்டிப்பதா அல்லது இந்தப் பாடலையும் வகுப்பில் சொல்லித்தரும் பேராசியர்களைத் தண்டிப்பதா? மானமிக்க தமிழனின் கோபங்கள் ஏன் இப்பொழுது எழவில்லை? அவளின் இளைய முலையை அவன் நோக்கியதைத் தலைவி வெளிப்படையாகச் சொல்லலாம் ஆனால் நான் பார்த்த போஸ்ட்டரில் யோனி காட்டியபடி அமர்ந்திருந்த பெண்ணைப் பற்றி சொன்னால் நான் ஆபாச எழுத்தாளனா?//


இளைய முலையை யார் பாலியல் சொல் என்று சொன்னது??


//நிர்வாணப் பித்தனின் இரவு பாடல் புணரப்பட்டு

தூக்கியெறிந்தார்கள் எனது

இரவை ஆண் குறியைப் போல தளர்ந்திருந்தும்

எனது கனவுகள் இரவுகளில் பாதுகாக்கப்படுகின்றனவா?//

இரவுக்கு ஆண்குறியை உவமைக்காட்டும் நீ, ஆபாச எழுத்தாளன் அல்லாமல் சீர்திருத்த எழுத்தாளானா??


உண்மைகள் இன்னும் பல இருக்க, கே.பாலமுருகன் எழுதிய ‘ஆபாச வீடியோவும்...’ என்ற கதையை பாட்டனோடு ஒப்பிட்டு நியாயம் கற்பிப்பது எவ்வளவு பெரும் மடமை! முதலில் தமிழை முறையாகப் படி, பின்பு எழுதுங்கள்!


இவர்கள் பாட்டனுக்குப் பிறந்த பேரன் இல்லை, இவர்கள் பாட்டனுக்குத் தப்பிப் பிறந்தவர்களே என்பதே சாலும்!


தொடரும்..

தமிழரண்.

6 comments:

Anonymous said...

வணக்கம் வாழ்க

தங்கள் வலைப்பதிவில் நல்ல பல பயனுள்ள தகவல்களைத் தருகிறீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். அப்பொழுதாவது இவர்கள் திருந்தட்டும்

இவனா தமிழன் இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது.

அன்புடன்
கிருஷ்ணன் நிபோங் திபால்

தமிழரண் said...

வணக்கம் திரு.கிருஷ்ணன்.

//அப்பொழுதாவது இவர்கள் திருந்தட்டும்//

"ஜென்மத்தில் வந்தது செருப்பு எடுத்து அடித்தாலும் போகாது" என நண்பர் நகைச்சுவையாகச் சொல்வார். இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை யாம் கொண்டிருக்கவில்லை. தவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டிய நிலையில் ஒரு மானமுள்ள தமிழனாக மட்டும் செயலாற்றுகிறேன்.

நன்றி. மீண்டும் வருக.

சுப.நற்குணன்,மலேசியா. said...

தமிழரண் அவர்களே வணக்கம்.

தங்கள் வலைப்பதிவில் சூடான இடுகைகளைக் கண்டேன். 'சிறுமைகண்டு பொங்கும்' தங்கள் தமிழ் உள்ளம் வாழ்க! தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தருக!

கே.பாலமுருகன் என்ற ஒரு தனிப்பட்ட படைப்பாளியை ஒடுக்குவதை விடவும், நமது மக்களுக்கு மரபு இலக்கியம் பற்றிய தெளிவையும், நல்ல இலக்கியப் படைப்பு எது என்ற தெளிவையும் எற்படுத்துவதே முதன்மையானது எனக் கருதுகிறேன்.

இருந்தாலும், 'தமிழைப் பழைத்தானைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்பதற்கொப்ப சிற்சில இடங்களில் 'மரண அடி' கொடுத்திருக்கும் தங்களைப் பாராட்டுகிறேன்.

சங்க இலக்கியம் தொடர்பான தங்களின் அகன்ற - ஆழமான பார்வை கண்டு மெய்சிலிர்க்கிறேன். இன்று மரபைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இளையோர்களிடம் துளிகூட இல்லை. மரபை மறந்தால் நாளைய தமிழினம் திக்கற்றுப் போகும்; திசைதெரியாமல் தொலைந்துபோகும் என்பது சிலருக்குப் புரிவதே இல்லை.

எதற்கெடுத்தாலும், வெள்ளையனைப் போல சிந்திக்கவும் செயற்படவுமே விரும்புகிறார்கள். "வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?" என்று காசி ஆனந்தன் போல இவர்களை நாக்கைப் பிடுங்கிறது போல கேட்க தோன்றுகிறது.

வெள்ளைக்காரக் குப்பைகளை மண்டைக்குள் சேகரித்து வைத்திருக்கும் இவர்களை வேரறுக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் காலந்தோறும் இருந்தே வருகிறார்கள். இப்போது, இணையம் - வலைப்பதிவு என்று எழுதி தமிழைக் கெடுக்கும் கேடர்களாக - கோடரிக் காம்புகளாகச் செயற்படுகின்றனர்.

இவர்களுக்கும் தக்க தருணம் வரும்போது பாடம் புகட்டுவோம். கருத்து மேடை தொடர்ந்து முழங்க என்னுடைய வாழ்த்துகள்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
தமிழரண் said...

நன்றி திரு.சு.ப நற்குணன். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

//வெள்ளைக்காரக் குப்பைகளை மண்டைக்குள் சேகரித்து வைத்திருக்கும் இவர்களை வேரறுக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் காலந்தோறும் இருந்தே வருகிறார்கள். இப்போது, இணையம் - வலைப்பதிவு என்று எழுதி தமிழைக் கெடுக்கும் கேடர்களாக - கோடரிக் காம்புகளாகச் செயற்படுகின்றனர்.//

இது முற்றிலும் உண்மை. வேரறுக்கும் பணியில் மானமுள்ள எல்ல தமிழர்களும் ஒன்று சேர வேண்டும் என்பதே என் அவா.

தமிழரண் said...

//good evening.
according to the blogger rules and regulations we need to neturalize your blog system and we accepted five reports during your comments agains individual criticsm.
By using our IP technicions and IT brilliants and blogger providers may find the blogger authors( http://karutthumedai.blogspot.com/) and will punish them according to the law and sections.//

ஆங்கிலத்தில் எழுதியதில் பல இலக்கண பிழைகள் அதிகமாக உள்ளன. திருத்திக்கொள்ளவும். நன்றி

முகவரியே இல்லாத வலைபதிவர்க்கு வணக்கம். உங்களின் ஐ.பி முகவரி கண்கானிப்பாளர்களையும் கணினி தொழில்நுட்ப ஆய்வுனர்களையும் பயன்படுத்தி தங்களின் விவரங்கள் அல்லது வலைப்பதிவுக்குள் நுழையும் தங்களின் இடம் குறித்த தகவலை அறிந்து மேலும் சீரமைக்கப்பட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.