Thursday 30 July 2009

நவின மொழி என்றால் என்ன?


//பாமரனும் புரிந்து கொள்ளும் ஒரு நவீன மொழியில் பாலியல் பேசினால் அது பாவம்.//

நவின மொழி என்றால் என்ன என்பதை சற்று நவின மொழி பேசும், எழுதும் மக்கள் யாரேனும் தெளிவு படுத்துங்கள். போதிய அறிவும் பொறுப்பும் இருந்தால். தமிழில் பேச்சுமொழி, செந்தமிழ் என இரு நடையே உள்ளது. விளக்கினால் நீளும். அப்படியிருக்க நவினமொழி ( modern language) என்பது என்ன? எவ்வினத்தார் பேசும் மொழி? அதற்கு இலக்கணம் என்ன? அவர்களின் இலக்கியம் என்ன? அவர்கள் எங்கே வாழ்கின்றனர்? கொஞ்சமும் மொழி அறிவே இல்லாத கூற்று!

//மரபிலக்கியங்கள் பாடல் வடிவில் மரபிலக்கண கட்டுமானங்களுடன் பாலியல் வெளிப்பட்டால் அது புனிதமா? சரியான செவ்விலக்கிய பார்வையே இல்லையே.//

மரபிலக்கண கட்டுமானங்களுடன் பாலியல் வெளிப்பட்டால் அது புனிதம் என்று யாரும் சொல்லவில்லை. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு, கம்பர் இயற்றிய கம்பராமயணம். பல இடங்களில் ஓட்டககூத்தர் இயற்றிய இராமயணத்தில் இடம் பெற்ற காட்சிகளை தமிழ்பண்பாட்டிற்கு ஒத்திருக்கும் வகையில் காட்சிகளை வேறுபடுத்தினார்,கருத்து பிறழாமல். இருப்பினும் தேவையில்லாத வருணனைகளைக் கம்பரசத்தில் இடித்துரைத்தவர் அறிஞர் அண்ணா. இப்பொழுது சிந்தியுங்கள் யாருக்குச் செவ்விலக்கிய பார்வையே இல்லை??

இன்றும் தோட்டத்துப் பாமரன் பாலியலை மிக கொச்சையாகத்தான் பேசுவான். 'யோனி' என்னும் சொல்லுக் கூட பாமரனுக்குத் தெரியாது என்பது புத்திலக்கியவாணர்களுக்குத் தெரியாதா? யோனி என்னும் சொல்லை விடுத்து பாமரனுக்குப் புரியும் மற்றொரு சொல்லைக் கொண்டுத்தான் இனி நீங்கள் இலக்கியம் படைக்க வேண்டும்! முடியுமா? துணிவுண்டா? அவனுக்கும் விளங்கும் வகையில் இலக்கியம் படைக்கிறோம் என்பது உண்மையானால்;எழுதுங்கள் பார்ப்போம்!

உண்மையைச் சொல்லப்போனால் பலபேர் எழுதும் புதுக்கவிதைகளுக்குப் படித்தவர்களுக்கே புரிவதில்லை. கேட்டால், பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியம் படைக்கிறார்களாம். வேடிக்கையான கருத்து!

2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

//பாமரனும் புரிந்து கொள்ளும் ஒரு நவீன மொழியில் பாலியல் பேசினால் அது பாவம்.//

மாபெரும் கண்டுபிடிப்புங்கோ...!!

ஆனால் அதிசயம் பாருங்கள். இவர்களின் 'நவின' மொழி 'பாமரனுக்கும்' புரிகிறதாம்.

இப்படித்தான், நவின மொழி, யதார்த்தம், நிதர்சமன் என்று சொல்லிக்கொண்டு ஒரு எழுத்தாளக் கூட்டம் நாட்டில் கொட்டமடிக்கிறது. இந்த குறைகுடங்கள்தான் நாட்டில் பெரும் பெரும் படைப்பாளிகளாம்!!

//உண்மையைச் சொல்லப்போனால் பலபேர் எழுதும் புதுக்கவிதைகளுக்குப் படித்தவர்களுக்கே புரிவதில்லை. கேட்டால், பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியம் படைக்கிறார்களாம். வேடிக்கையான கருத்து!//

முற்றிலும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

Unknown said...
This comment has been removed by a blog administrator.