Wednesday 22 July 2009

கே. கிறுக்குபால அவர்களுடன் ஒரு கோப்பை பழைய கள்ளு!

கே. புண்ணியன் அவர்கள், கருத்துமேடையில் இக்கற்பனை நேர்காணலை ஏற்றச்சொன்னார். நவீன இலக்கியம் படைக்கிறோம் என்று எழுதுகிற பண்புக்கெட்ட எழுத்தாளர்களுக்கே இந்நேர்காணல் சுட்டும்.

பாகம் 1 - கே. கிறுக்குபால அவர்களுடன் ஒரு கோப்பை பழைய கள்ளு!.

இடம் - கருத்து மேடை

குறிப்பு : இஃது இலக்கியப் படைப்பு இல்லை. இப்படியும் இலக்கியம் எழுதலாம் என்று நினைத்துவிடாதீர்கள். கற்பனையில் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தை மட்டும் அடையாளம்காண்க.


சிங்கமுத்து - தமிழைப்பற்றி தங்களின் கருத்து?


கே.கிறுக்குபால - ''தமிழ் எங்கள் உயிர்'' அதற்கு விளக்கம் கேட்டால் எப்படிச் சொல்வது?


பார்வையாளன். மனதிற்குள் - அதை ஏற்கனவே நாங்கள் படித்துவிட்டோம். இதற்கு ஒன்றும் தெரியாது என்றே கூறியிருக்கலாம். செத்த மூளைபோல, ஆகவேதான் சொந்தமாகக் கருத்து கூறமுடியவில்லை.


சிங்கமுத்து - ஐயா, தாங்கள் சங்க இலக்கியங்களின் நுனி புல்லையாவது மேய்ந்தது உண்டா?


கே.கிறுக்குபால - "இப்பொழுது போய் பாடப் புத்தகங்களைப் புரட்டுவது போல, யாப்பிலக்கணம் பயின்று ஓசையறிந்து , எண்சார்விருத்தங்களை ஒழுங்குப்படுத்தி எல்லாம் கொண்டு" வருவதற்குள் காமம் கசியும் ஆசாமிகள் மேலும் 5 சிறுமிகளைக் கடத்தி கற்பழித்து துண்டு துண்டாக வெட்டி துணிப் பைக்குள் போட்டு வீசிவிடுவார்கள்.


பார்வையாளர் மனதிற்குள் - என்ன இவர் பித்துப் பிடித்தவர்போல் பேசுகிறார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ....


சிங்கமுத்து - எல்லா ஆசிரியர்களும் அவர்கள் எங்குச் சென்றாலும் தங்களை ஓர் ஆசிரியராக காட்டிக்கொள்கிறார்கள் அதில் பெருமையும் பெற்றுக்கொள்கிறார்கள். மாணவர்களும் ஓர் ஆசிரியர் தல்லாடிய அகவையிலும் அவரை ஆசிரியராகவே காண்கிறார்கள். ஆனால் தாங்கள் மட்டும் மாற்று கருத்து கொண்டியிருப்பது ஏன்?


கே.கிறுக்குபால - என் விரிவுரையாளர் ஒருவர் முன்பு சொல்வார் மீன் வாங்கும்போதுக்கூட ஆசிரியராக இருக்க வேண்டுமாம், என்னய்யா இப்படியொரு கெடுபிடி? வகுப்பறையிலும் பள்ளியிலும் நேர்மையாக ஆசிரியராக மட்டுமே விரும்புகிறேன், பள்ளியைவிட்டு வெளிவந்துவிட்டால் நான் எந்த தனிப்பட்ட அடையாளத்தையும் விரும்பாதவன்.


பார்வையாளன் மனதிற்குள் - ஓ.... இவர் பள்ளியில் ஆசிரியர், வெளியில் என்னவோ??....


சிங்கமுத்து - தாங்கள் இப்பொழுது பாலுணர்வு துறையில் தொடர்கல்வியை மேற்கொண்டியிருக்கிறீர்கள் என்று அறிகிறோம். வாழ்த்துக்கள். எத்தனை ஆண்டுகளாகப் பயில வேண்டும்?


கே.கிறுக்குபாலா - நன்றி. சுமார் 4 ஆண்டுகள்.


சிங்கமுத்து - 4 நான்கு ஆண்டுகள் பயின்றால்தான் பட்டம் கொடுப்பார்களா? வீட்டிலே இருந்து உங்கள் உயிர்பான மூளையைப் பயன்படுத்தி ஓர் ஆண்டிலே கற்கலாமே?


கே.கிறுக்குபால - ஆஹா... எந்த ஊரில் ஐயா நீங்கள் இருக்கிறீர்கள்? சும்மா வீட்டில் இருந்தெல்லாம் பாலியியலைப் படிக்க முடியாது. நான்கு ஆண்டுகளில் பயின்று தேர்வில் 'வாந்தி' எடுத்தாதானே பட்டம் கொடுப்பார்கள். அதுதானே விதிமுறை, நடைமுறை. வேடிக்கையாக இருக்கிறது உங்கள் கேள்வி.


பார்வையாளன் மனதிற்குள் - ( 4 வருடம் படித்தால்தான் பட்டம் வாங்க முடியும் என்று மிரட்டுவது போல இருக்கிறது.) தமிழை முறையாகப் படிக்க சொன்னால். இப்படி சொல்கிறான். அங்கே அன்னியர் போட்ட விதிகளுக்கு உட்பட்டு பேடிபோல 'பாலுணர்வு துறையில்" படிக்கிறானாம். வீட்டு அருகிலிருக்கும் ஆற்றில் நீச்சல் பழகுவது போல கற்க முடியாதா என்ன?


சிங்கமுத்து - ஐயா, தாங்கள் மரபு இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருக்கும் போதே, தங்களுக்குள் ஊறும் படைபாற்றலை தடுக்க முடியவில்லை என்கிறீர்கள். அப்படி உங்களுக்கு என்னதான் ஊறு எடுத்து ஊற்றுகிறது?


கே.கிறுக்குபால - என் உள்ளுணர்வில் எழுந்து, என் குருதியில் பாய்ந்து, என் சொத்த மூளையில் இலக்கியம் ஊற்று எடுத்து ஊற்றுகிறது, ஐயா!


பார்வையாளன் - என்ன ஊறி வரும்? காம இச்சைதான் கசிந்து கொண்டு ஊற்றுகிறது. பின்பு எப்படி நல்ல படைப்பு வரும். அரிப்பான படைப்புதான் வரும்.


சிங்கமுத்து - ஐயா தாங்கள் 'ஆபாச DVDயும் மர்ம போஸ்டரும்' எனும் கதையை எழுதிய நோக்கம்?


கே.கிறுக்குபாலா - மன்னிக்க வேண்டும். அது கதையல்ல ஆய்வுக் கட்டுரை.


பார்வையாளன் - என்னது ஆய்வுக் கட்டுரையா??? ஒரு தரவுகள் இல்லை, கணக்கெடுப்பு இல்லை, கருதுகோள் இல்லை, முன்னுரை இல்லை, முடியுரை இல்லை. என்ன ஐயா இப்படியொரு ஆய்வுக்கட்டுரை?? ஒரு சிறுவன் பார்த்த ஆபாச நிகழ்வுகள்தானே அதில் எழுதப்பட்டியிருந்தது. ம்ம்ம்... ஆய்வுக்கட்டுரை வடிவத்தையும் மாற்றிவிட்டார்களா? சொல்லவே இல்ல!!!!


சிங்கமுத்து - ஆமாவா?? சரி, அதன் நோக்கம்?


கே.கிறுக்குபாலா - படித்துப் பாருங்கள். புரியும்.


பார்வையாளன் மனதிற்குள் - ஒரு சிறுவன் 'நீல படத்தைப்' பார்த்தது தானே கதை. அதைச் சுருக்கமாகமவே சொல்லியிருக்கலாம்.


சிங்கமுத்து - ஆபாச DVDயும் மர்ம போஸ்டரும்' எனும் ஆய்வுக்கட்டுரையை உங்கள் பெற்றோர் முன் வாசித்து காட்டியது உண்டா?


கே. கிறுக்குபாலா - இன்னும் இல்லை


பார்வையாளன் மனதிற்குள் - படித்துக் காட்டுடா, மானமுள்ள பெற்றோராக இருப்பின் உன்னைச் செருப்பால் அடிப்பார்கள்.


சிங்கமுத்து - எல்லாவற்றையும் மரபு என்று மறைத்து மறைத்து வைத்திருப்பதனால்தான் இன்று மாந்தர்கள் ஓர் இறுக்கமான வாழ்வினை வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள் என்று குற்றம் சாடுகிறீர்கள். எத்தனைப் பேர் உங்களிடன் இவ்வாறு குற்றம் சாடினர் என்று கணக்குக் கூறமுடிமா?


கே. கிறுக்குபாலா - ஏன் இல்லை... நான்.. என் சக நண்பர்கள் கூறுகிறார்களே. பிறர் கூற அச்சப்படுகிறார்கள். அவ்வளவுதான்.


பார்வையாளன் மனதிற்குள் - அடப்பாவி, உன் காம இச்சைகளைத் தனித்துக் கொள்ள உலக மக்களைப் பலிகெடாவாக ஆக்கிவிட்டானே! பொறுக்கி பையனே!


சிங்கமுத்து - இந்தப் புதிய தலைமுறைக்கு மன்னிக்கனும் நவீன தலைமுறைக்கு நீங்கள் கூற விரும்புவது?


கே. கிறுக்குபாலா - என் படைப்புகளைப் படியுங்கள். தமிழ் வளரும், இலக்கியம் வளரும், உங்கள் வாழ்க்கையும் மேன்மையடையும்.


பார்வையாளர் மனதிற்குள்: என்ன கொடுமை ஐயா இது!!!


சிங்கமுத்து - உங்கள் இலட்சியம்?


கே. கிறுக்குபாலா - மு.வ., பார்த்தசாரதி ஆகியவர்கள் எழுதிய நாவலையே 10 ஆண்டுகளாக இன்னும் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் திணித்துக்கொண்டியிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக என் நவீன படைப்புகளைப் பாடமாக ஆக்குவதே என் இலட்சியம்.


பார்வையாளர் மனதிற்குள் - கடவுளே இந்த கொடுமை மட்டும் இவ்வுலகத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்.


சிங்கமுத்து - தங்கள் வலைப்பதிவில் எதிரான மறுமொழி இடுவோர்களின் கருத்துக்களை மறைத்துவிடீர்களாம், தங்களைப் பாராட்டுகின்ற நண்பர்களின் மறுமொழியை மட்டும் இட்டு பெருமைகொள்கிறீர்களாம். ஏன் இப்படி?


கே. கிறுக்குபால - யார் அனுப்பிய மடலைப் போட வேண்டும் போடக்கூடாதென்பதை வலைப்பூவின் உரிமையாளரான நானே தீர்மானிக்க இயலும் ஆதலால் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் அதிகாரம் செலுத்தாதீர்கள்!!


பார்வையாளர்கள் மனதிற்குள் - வேறு என்ன? கேள்விகளுக்குப் பதில் கொடுக்க இயலாமைதான். மறைப்புக்குக் காரணம்.


மற்றொரு ... பார்வையாளன் மனதிற்குள் - என்ன செருக்கு... எல்லா வலைபதிவும் 'கோகள்' நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது இவருக்குத் தெரியாது போலும்.


சிங்கமுத்து - நீங்கள் தமிழ் மரபிற்கு தேசிய விளக்கம் கேட்டீர்......


பார்வையாளர்கள் - போதும் போதும்! நிறுத்துக்கள். அவன்(கே. கிறுக்குபாலா) பேசினான் அப்புறம் நாங்க என்னா பண்ணுவோமன்னு எங்களுக்கே தெரியாது!! ( பார்வையாளர்கள் கருத்துமேடையில் ஏறுகிறார்கள்)


சிங்கமுத்து் - சரி.. சரி நிறுத்திவிடுகிறேன்...கருத்து மேடையிக்கு வந்து தங்களின் 'சொத்த மூளையிலிருந்து' வந்த கருத்துக்களைக் கொட்டியதற்கு நன்றி. எங்காவது ஓடிவிடுங்கள் கே.கிறுக்குபால ஐயா! இவர்கள் மானமுள்ள தமிழ்மக்கள்.. பின்பு உங்களை ஊலை முட்டையாலே அடித்துவிடுவார்கள்.


கே. கிறுக்குபாலா - ஐயோ! ஐயோ! வேண்டாம் என்னை மன்னித்துவிடுங்கள்... ( ஓடுகிறான்)...


எச்சரிக்கை - பார்வையாளர்களின் துரத்தல் நிற்பதில்லை......

7 comments:

Anonymous said...

வணக்கம். தங்களின் 'கருத்துமேடை' வலைப்பூவை தற்செயலாக பார்த்தேன்; படித்தேன். போற்றுதலும் தூற்றுதலும் நமது சமுதாயத்திலிருந்து அவ்வளவு எளிதில் அகன்று விடுமா என்ன? கே.பாலமுருகன் என்ற நண்பர் என்ன நோக்கத்திற்காக கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி தமது கதையினை என்று தெரியவில்லை. (முடிந்தால் விளக்கம் கொடுக்கவும் ஐயா கே.பாலகுமாரன் அவர்களே) எழுதுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட கீழ்த்தனமான சிந்தனையில் ஒரு படைப்பைப் படைத்திருக்கிறார்? சமுதாயத்திற்கு, குறிப்பாக நமது இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற, பயன்மிக்க, கருத்தாழமிக்க படைப்புகளைப் படைக்கலாமே. படிப்பதற்கே வாய் கூசும் வார்த்தைகளைக் கையாளும் இவர்களைப் போன்ற அற்ப சிந்தனையாளர்களை என்ன சொல்வதோ?

\\ யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.\\

இதுதான் ஆரோக்கியமான ஒரு படைப்பாளியின் சிந்தனையா? மயக்கமே வருகிறது ஐயா?!!!

உதயன்,
மலேசியா.

Anonymous said...

கருத்துமேடை மாதிரி தெரில, நகைச்சுவை மேடை மாதியும் அசிங்க பிடிச்ச மேடை மாதிரி தெரியுது. கருத்துக்கள அழகா விவாதிக்கலாம், ஆனா இங்க அப்படி இல்லெ. நீங்க சொல்ற கே.கிறுக்குபால நல்ல கதைகளும் எழுதிருக்காருங்க.
சும்மா அளந்துகட்டிகிட்டு இருக்காதீங்க.

(எம்.ஏ இளஞ்செல்வன் எழுதனப்ப இப்படித்தான் எவன் எவனோ ஏசனானுங்க, சீ.முத்துசாமி எழுதனப்பயும் எவ்ளவோ பேசனாங்க, பா.சிவம் எழுதனப்பயும் எவ்ளவோ பேசனானுங்க. . எதையும் கிழிக்க முடியலைய்யா. .

சிவசந்திரன்
பினாங்கு

தமிழரண் said...
This comment has been removed by the author.
தமிழரண் said...

தமிழரண் -

சிவசந்திரன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

//(எம்.ஏ இளஞ்செல்வன் எழுதனப்ப இப்படித்தான் எவன் எவனோ ஏசனானுங்க, சீ.முத்துசாமி எழுதனப்பயும் எவ்ளவோ பேசனாங்க, பா.சிவம் எழுதனப்பயும் எவ்ளவோ பேசனானுங்க. . எதையும் கிழிக்க முடியலைய்யா.//

எதைக் கிழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
நீங்கள் மேற்காட்டியவர்கள் எல்லாம் நல்ல எழுத்தாளர்கள் தானே??

//கே.கிறுக்குபால நல்ல கதைகளும் எழுதிருக்காருங்க.
சும்மா அளந்துகட்டிகிட்டு இருக்காதீங்க.//

கே.கிறுக்குபால வெறும் கற்பனை கதைமாந்தரே ஆவார். உண்மையில் அப்படி ஓர் எழுத்தாளர் இருந்தால், உடனே அவரின் படைப்பை அனுப்புங்கள்.

நன்றி.

Anonymous said...

கிறுக்குபாலா வெறும் மற்பனையா? இல்லையே, நீங்கள் யாரையோ சுட்டி இப்படி எழுதுவது அநாகரிகமா இருக்குப்பா.

அந்த ஒரு வரியை இப்படி பிடிச்சிக்கிட்டு பேசறீங்க? வேற நல்ல விஷ்யமே இல்லையா?

எவ்வளவோ கத்தி போராடி உங்களால் ஒன்னும் செய்ய முடியாதுப்பா. இலக்கியம் அதன் அதன் இடத்தைத் தேடிக் கொள்ளும்.

Anonymous said...

பெயர் குறிப்பிடாத நாகரிவாதிக்கு வணக்கம்.

//கிறுக்குபாலா வெறும் கற்பனையா? இல்லையே, நீங்கள் யாரையோ சுட்டி இப்படி எழுதுவது அநாகரிகமா இருக்குப்பா//

'யாரையோ சுட்டி இப்படி எழுதியதற்கே அநாகரிமா என்று கேட்கும் நீங்கள், நவீன இலக்கியம் என்ற பெயரில் காம இச்சைகளை எழுதிகொண்டியிருக்கும் இவர்களுக்கு நீங்கள் சொல்லபோகும் கருத்து??

//அந்த ஒரு வரியை இப்படி பிடிச்சிக்கிட்டு பேசறீங்க? வேற நல்ல விஷ்யமே இல்லையா?//

நவீன இலக்கியம் போன்றே உங்களுக்கு ஒரு உவமை. இலக்கியம் எனும் ஒரே தட்டிலே ஒரு பக்கம் சோற்றையும், மறுபக்கம் மலத்தையும் கொடுத்தால் என்ன செய்வீர்?? சொற்றை மட்டும் எடுத்து தின்றுவிட்டு விடுவீர்களா? மலத்தைப் பற்றி கண்டுகொள்ள மட்டீரோ?? நாகரிகவாதியே நீங்களே சொல்லுங்கள்.

கண்ணன் - பினாங்கு

தமிழரண் said...

முகம் தெரியாத நண்பருக்கு.

//எவ்வளவோ கத்தி போராடி உங்களால் ஒன்னும் செய்ய முடியாதுப்பா. இலக்கியம் அதன் அதன் இடத்தைத் தேடிக் கொள்ளும்.//

ஆமாம். காமபித்தர்களை சொல்லித் திருத்த முடியாது. நானும் ஒப்புக்கொள்கிறேன்.இலக்கியம் அதன் இடத்தைத் தேடிக்கொள்ளும். முற்றிலும் உண்மை. நீங்கள் என்னதான் முக்கி முக்கி எழுதினாலும் குப்பை போய்ச்சேரும் இடம் உங்களுக்கே தெரியும்.

நன்றி.